அப்பாவி முஸ்லிம்களின் கைதை கண்டித்து இன்ஷா அல்லாஹ் சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
 


தஞ்சை மாவட்டம் அவனியாபுரத்தில் முருகேசன் என்பவரின் கொலை வழக்கில் அப்பாவி முஸ்லிம்களான சாதிக் மற்றும் இமாம் அலி மீது பொய் வழக்கு போடப்பட்டு 1 மாத காலமாக சிறையில் வாடி வருகின்;றனர்.

எந்த தவறும் செய்யாத அப்பாவி முஸ்லிம்களை பழிதீர்க்க வேண்டும என்ற உள் நோக்கத்துடன் தஞ்சை திருவிடைமருதூர் ஆய்வாளர் பழனிச்சாமி மற்றும் காவல்துறையினரும் செயல்பட்டு வருகின்றனர்.

அப்பாவிகள் மீது பொய் வழக்குகள் தான் போடப்பட்டுள்ளது என்று உயர் அதிகாரிகளுக்கு நன்கு தெரிந்தும் இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டவில்லை.

அப்பாவி முஸ்லிம்களும் இதுவரை வழக்குகளிலிருந்து விடுதலை செய்யப்படவில்லை.

இதை கண்டித்து இன்ஷா அல்லாஹ் வருகின்ற வெள்ளிக்கிழமை (21-3-2008) அன்று சென்னை பார்க்டவுனில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது



அநீதி இழைக்கப்பட்ட சமுதாயமே அணி திரண்டு வா!

உன் மீதும் நாளை பொய் வழக்கு போடப்படலாம்?

இன்று நியாயம் கேட்டு திரண்டால்,
நாளை உன் எல்லோருக்கும் நியயாம் பிறந்திடும்
 


இன்ஷா அல்லாஹ் ஆர்ப்பாட்டத்தில் முழங்கப்படவுள்ள கோஷங்கள்!



அல்லாஹு அக்பர்
அல்லாஹு அக்பர்
அல்லாஹு அக்பர்


போராட்டம் போராட்டம்
முஸ்லிம்களின் போராட்டம்!

விடுதலை செய் விடுதலை செய்!
அப்பாவி முஸ்லிம்களை
விடுதலை செய் விடுதலை செய்!

நடவடிக்கை எடு நடவடிக்கை எடு
பொய் வழக்கு போட்ட
காவல் துறை அதிகாரி மீது
நடவடிக்கை எடு நடவடிக்கை எடு

காவல் துறையே காவல் துறையே
சிறுபான்மையினருக்கு ஒரு நீதி
சினிமாகாரனுக்கு ஒரு நிதியா
அக்கிரமம் அக்கிரமம்

விடுதலை செய் விடுதலை செய்
இமாம் அலியை விடுதலை செய்
விடுதலை செய் விடுதலை செய்
சாதிக்கை விடுதலை செய்

நடவடிக்கை எடு நடவடிக்கை எடு
திருவிடைமருதூர் ஆய்வாளர் பழனிச்சாமி மீது
நடவடிக்கை எடு நடவடிக்கை எடு
 

 

 

 

 

 


 

        Email Us        |     FeedBack           |    Introduce To Friends    |   Advertisements   |   Tntj.net - 2005