பள்ளி மாணவிகளிடம் ஆசிரியர் சில்மிசம்!

  எந்த நடவடிக்கையும் எடுக்காததால் நேற்று TNTJ நடத்திய முற்றுகைப் போராட்டம்

  பெண்கள் துடைப்பத்துடனும் செருப்புடன் போராட்டத்தில் பங்கேற்பு

  புகைப்படங்களுடன் செய்தி!

 


காஞ்சி மாவட்டம் ஆலந்தூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் மரிய ஜொசப் என்ற ஆரியர் பள்ளியில் பயிலும் மாணவிகளிடம் ஆபாசமாக நடந்து கொள்வதாக பெற்றோர்கள் ஆளந்தூர் தவ்ஹீது; ஜமாஅத்திடம் புகார் செய்தனர். தகவல் அறிந்த ஆலந்தூர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு பள்ளி நிர்வாகத்திடம் கூறினர்.

பள்ளி நிர்வாகம் இதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் ஆளந்துரில் உள்ள நமது TNTJ சகோதர சகோதரிகள் பள்ளியை முற்றிகையிட்டு பள்ளி மாணவிகளிடம் சில்மிசம் செய்த மரிய ஜோசப்பை கைது செய்யக் கோரி நேற்று (19-3-2008) போராட்டம் செய்தனர். இப்போராட்டத்தில் தவ்ஹீத் பெண்கள் கையில் துடைப்பத்துடனும் செருப்புடனும் இருந்து போராட்டம் செய்தது குறிப்பிடதக்கது. இதை அறிந்த காவல் துறையினர் உடனே வந்து மரிய ஜோசப்பை கைது செய்தனர் வழக்கு போட்டனர்.

 

இந்த செய்தி இன்று (20-3-2008) தினகரன் தினமலர் போன்ற பத்திரிக்கைகளில் வெளியானது.

தினமலரில் இன்று (20-3-2008)  வெளியான செய்தி:
 

 

        Email Us        |     FeedBack           |    Introduce To Friends    |   Advertisements   |   Tntj.net - 2005