இன்று தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டங்கள்

 சென்னை ஆர்ப்பாட்டத்தில் கொட்டும் மழையில் கூடிய மக்கள் கூட்டம்!

கை குழந்தைகளுடன் பெண்கள் ஆர்ப்பாட்டம்!

 புகைப்படங்களுடன் செய்தி...
 

தஞ்சை மாவட்டம் அவனியாபுரத்தில் முருகேசன் என்பவர் சில நாட்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் சிறிதும் சம்பந்தப்படாத அப்பாவி முஸ்லிம்கள் சாதிக் மற்றம் இமாம் அலி ஆகியோர் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் கடந்த 1 மாத காலமாக சிறையில் வாடி வருகின்றார்கள்.

எந்த தவறும் செய்யாத அப்பாவி முஸ்லிம்களான சாதிக் மற்றும் இமாம் அலி இருவர் மீதும் உள்னோக்கத்துடன் திருவிடைமருதூர் காவல்துறை ஆய்வாளர் பழனிச்சாமி மற்றும் D.S.P ரொசாரியோ ஆகிய இருவரும் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் அப்பாவிகள் இவர்கள் மீது பொய்வழக்கு தான் போடப்பட்டுள்ளது என்று உயர் அதிகாரிகளுக்கு நன்கு தெரிந்திருந்தும் D.S.P ரொசாரியோ, ஆய்வாளர் பழனிச்சாமி ஆகிய இருவர் மீதும் எந்த நடவடிககையும் எடுக்கப்படவில்லை. பொய் வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரும் இதுவரை விடுவிக்கப்படவில்லை.

இதை கண்டித்து இன்று (21-3-2008) தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.

சென்னை மாவட்டத்திலும் இன்று (21-3-2008) பார்க் டவுனில் ஆர்ப்பாட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இன்று (21-3-2008) மதியத்திலிருந்து மழை பெய்ய ஆரம்பித்தது. நேரம் செல்ல செல்ல மழை அதிகரிதது கொண்டே இருந்ததே தவிர குறைய வில்லை. எனினும் சென்னை பார்க் டவுனில் கண்டன குரல் எழுப்ப மக்கள் மழையை பொருட்படுத்தால் அலைகடலென திரண்டனர்.

 

(மழையின் காரணமாக புகைப்படங்களை சரியான முறையில் எடுக்க இயலவில்லை)


பெண்கள் கை குழந்தைகளுடுன் கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டக் கோஷம் எழுப்பினார்கள். சிறியவர் பெரியர் என அனைவரும் தன் மீது விழும மழைத்துளியை பொருட்படுத்தாமல் தன் சமுதயாத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கெதராக போராட்டக் கோஷங்களை எழுப்பினர்.

மாநிலப் பொதுச் செயலாளர் எஸ்.எம் பாக்கர் அவர்கள் இப்போராட்டதில் கலந்து கொண்டு கொட்டும் மழையில் கூடிஇருந்த மக்களிடையே கண்டன உரை நிகழ்த்தினார்கள்.
 


ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
 

        Email Us        |     FeedBack           |    Introduce To Friends    |   Advertisements   |   Tntj.net - 2005