TNTJ அஜ்மன் மண்டலத்தின் புதிய நிர்வாகம்!

  சென்ற மாதம் நடைபெற்ற நிர்வாகத் தேர்வு!
  புது நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு
  நிர்வாகிகளின் பட்டியல்...

 

அல்லாஹ்வுடைய மாபெரும் கிருபையால் 08.02.2008 வெள்ளிக்கிழமை அஸர் தொழுகைக்கு பிறகு அஜ்மான் மண்டலத்தில் TNTJ ன் கிளையான ஜமாஅத்துத் தவ்ஹீத் நிர்வாகக் தேர்வு அமீரக ஒருங்கிணைப்பாளர் சகோ.ஹாமின் இப்ராஹீம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் கீழ்கண்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தலைவர் : சகோ.அஷ்ரப் அலி (அத்திக்கடை)
துணைத்தலைவர் : சகோ.அப்துர் ரஹ்மான் (திருநெல்வேலி)
பொதுச்செயலாளர் : சகோ.ஜலாலுதீன் (ராமநாதபுரம்)
துணைப்பொதுச்செயலாளர் : சகோ.முஜிபுர் ரஹ்மான் (மன்னார்குடி)
பொருளாளர் : சகோ.நஜீர் அஹ்மது (கோவிந்தகுடி)
செயலாளர்கள் : சகோ.முஹம்மத் சலீம் (மேலப்பாளையம்)
                                       சகோ.அரபாத் அலி (ராமநாதபுரம்)
                                       சகோ.சாதிக் ரிபாயிதீன் (ஏறல் - தூத்துக்குடி)
                                       சகோ.ஹலீல் ரஹ்மான் (குடவாசல்)
சனாய்யா பொறுப்பாளர் : சகோ.சையத் மைதீன்(பெரியபட்டிணம்- ராமநாதபுரம்)
பத்திரிக்கை பொறுப்பாளர் : சகோ.முஹம்மத் ரபீக் (ஆறாம்பண்ணை)
செயற்குழு உறுப்பினர்கள் : சகோ.பகுருதீன் (தக்கலை)
                                                                  சகோ.ஹஜ்ஜி முஹம்மது (சங்கரன் பந்தல்)
                                                                  சகோ.சேக் முகம்மது
                                                                  சகோ.ஹாஜா நஜீமுத்தீன்
ஆலோசகர் : சகோ.ஜாகிர் (பேர்ணாம்பட்டு)

நிர்வாக தேர்விற்கு பின் நம்முடைய பணிகளில் இருக்க வேண்டிய உளத்தூய்மையையும், உளத்தூய்மையினால் கிடைக்கும் வெகுமதிகளையும் சுருக்கமாகவும், தெளிவாகவும் ஷேக் அப்துஸ் ஸமது மதனி அவர்கள் எடுத்துரைத்தார்கள். சகோ.ஹாமின் இப்ராஹீம் அவர்கள் நாம் கொண்டிருக்கும் கொள்கையைப்பற்றியும், கொள்கையில் உறுதியைப்பற்றியும், நிர்வாகிகளிடம் இருக்க வேண்டிய பல அரிய பண்புகளைப்பற்றியும் விளக்கினார்கள்.

இறுதியாக சகோ.ஜாகிர் அவர்களின் நன்றியுரையுடன் கூட்டம் இனிதே நிறைவுற்றது. எல்லாப்புகழும் வல்ல ரஹ்மானுக்கே.


 

 

 

        Email Us        |     FeedBack           |    Introduce To Friends    |   Advertisements   |   Tntj.net - 2005