அல்ஐனில் நடைபெற்ற பெண்களுக்கான சிறப்பு இஸ்லாமிய நிகழ்ச்சி!

  சகோதரிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு
  அல்ஐன் TNTJ ஏற்பாடு
  புகைப்படங்களுடன் செய்தி...

 

ஜமாஅத்துத் தவ்ஹீத் அல் அய்ன் மண்டலம் கடந்த 28-03-08 வெள்ளியன்று பெண்களுக்கான சிறப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது.

 

நிகழ்ச்சியை அல் அய்ன் நிம்ஸ் மாணவி ரசூல் ஃபாத்திமா அறிமுக உரையுடன் துவக்கிவைத்தார். 'நபிவழியும் நம் வழியும்' என்ற தலைப்பில் மவுலவி அப்துஸ்ஸமது அவர்கள் சிறப்புரையாற்றினார்கள். பெருந்திரளாக கலந்து கொண்ட சகோதரிகளுக்கு நபி வழி என்றால் என்ன? என்பதைப்பற்றி அறிந்து கொள்வதற்கான நல்ல வாய்ப்பாக அந்த நிகழ்ச்சி அமைந்திருந்தது.

 

 

நிகழ்ச்சிக்கு வழக்கம் போல் ஆண்களும் கலந்து கொண்டனர். இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் காலங்களில் பெண்களின் முன்னேற்றத்திர்காக இதுபோன்ற நிகழ்ச்சிகள் அவ்வப்போது நடைபெறும் என அல் அய்ன் ஜமாஅத்துத் தவ்ஹீதின் தலைவர் முஹம்மது ஸலீம் அவர்கள் நம்மிடம் தெரிவித்துள்ளார்.

எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே!
 

 

 

        Email Us        |     FeedBack           |    Introduce To Friends    |   Advertisements   |   Tntj.net - 2005