நேற்று நடைபெற்ற UAE யின் அனைத்து மண்டல ஆலோசனை கூட்டம்!

  2 வது முறையாக அபுதாபயில் கூடியது!
  மாநிலப் பொதுச் செயலாளர் பாக்கர் மற்றும் செயலாளர் ஜாஃபர் பங்கேற்பு
  நிகழ்ச்சியின் போது இஸ்லாத்தை தழுவிய திருநெல்வேலியைச் சேர்ந்த முருகன்!
  புகைப்படங்களுடன் செய்தி...

 

கடந்த 22.02.2008 வெள்ளிக்கிழமை காலை 9:45 க்கு அபுதாபி தவ்ஹீத் ஜமாஅத் மர்க்கஸில் ஐக்கிய அரபு அமீரகத்தின் அணைத்து மண்டல நிர்வகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஒவ்வொரு ழூன்று மாதத்திற்கு ஓர் முறை வெவ்வேறு மண்டலங்களில் நடைபெறும் இவ்வாலோசனை கூட்டம் இம் முறை அபுதாபியில் நடப்பது இரண்டாவது முறை என்பது குறிப்பிடதக்கது.

இக் கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக தமிழகத்திலிருந்து வருகை தந்துள்ள மாநில நிர்வாகிகள் சகோதரர் எஸ்.எம். பாக்கர் மற்றும் சகோதரர் கோவை ஜாஃபர் அவர்கள் கலந்துகொண்டார்கள்.


 


முதலில் தவ்ஹீத் ஜமாஅத்தின் துணைத்தலைவர் ஷேக்முஹம்மது அவர்கள் நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்த அணைத்து நிர்வாகிகளையும் வரவேற்று பேசினார். அதனை தொடர்ந்து TNTJ ன் ஐக்கிய அரபு அமீரகத்தின்; ஒருங்கிணைப்பாளர் சகோதரர் எஸ்.ஹாமின்இபுராஹீம் அவர்கள் ஆலோசனை கூட்டத்தை தொடங்கி வைத்து நிர்வாகிகளை மணடலத்தின் செயல்பாட்டு அறிக்கையினை சமர்பிக்குமாறு கூறினார்

 

நிர்வாகிகள் தங்களுடைய மண்டலத்தின் கடந்த ழூன்று மாத செயல் அறிக்கையை வாசித்து காட்டி நாங்கள் செய்த இந்த பணிகள் அனைத்தும் அல்லாஹ்வின் திருப்பொறுத்தம் ஒன்றை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செய்துள்ளோம் என்று ஒவ்வொறு நிர்வாகியும் கூறினார்கள்.

பின்னர் பேசிய மாநில பொதுச்செயலாளார் எஸ்.எம்.பாக்கர் அவர்கள் இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் மே 10,11 ஆகிய தேதிகளில் தஞ்சை வல்லத்தில் நடைபெற இருக்கும் ஏகத்துவ எழுச்சி மாநாடு குறித்து விரிவாக எடுத்து கூறினார்கள் இதில் மண்டல நிர்வாகிகளின் பங்களிப்பு எப்படிப்பட்டதாய் இருக்கவேண்டும் என்பதை சுட்டி காட்டினார்கள் அவர்களின உரை முழுவதும் மாநாடு சம்மந்தமாகவே இருந்தது. இன்ன பிற ஆலோசனைகளுக்கு பிறகு ஆலோசனை கூட்டம் நிறைவு பெற்றது வந்திருந்த நிர்வாகிகள் அனைவரும் இன்ஷாஅல்லாஹ் இம் மாநாட்டுக்காக தங்களால் இயன்ற ஒத்துழைப்புகளை வழங்குவதாக உறுதியளித்து சென்றார்கள்.


 


இந் நிகழ்ச்சியின் போது சத்திய இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட திருநெல்வேலி மாவட்டம் துலுக்கர்பட்டியை சேர்ந்த முருகன் என்ற சகோதரருக்கு மாநில பொதுச் செயலாளர் பாக்கர் அவர்கள் திருமறை குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பு ஒன்றை வழங்கினார்கள்.தன்னுடைய பெயரை முஹம்மதுஷபிக் என்று மாற்றிக் கொண்டதோடு தன்னுடைய வாழ்க்கையை அல்லாஹ்வும் அவனது தூதர் நபி(ஸல்) அவர்களும் காட்டி தந்த வழிமுறைபடி அமைத்துக்கொள்வேன் என்று கூறினார்.


 

 

        Email Us        |     FeedBack           |    Introduce To Friends    |   Advertisements   |   Tntj.net - 2005