முதன் முறையாக அல்ஐனில் நடைபெற்ற மாபெரும் இரத்த தான முகாம்!

  பெண்கள் உட்பட பலர் ஆர்வத்துடன் பங்கேற்பு

  புகைப்படங்களுடன் செய்தி...
 

 

அல் அய்ன் ஜமாஅத்துத் தவ்ஹீதின் சார்பில் முதல்; முறையாக இரத்த தான முகாம் ஒன்று கடந்த 29-02-08 அன்று மதியம் 2-30 முதல் 6-00 வரை சிறப்பாக நடந்தது. அல்ஹம்து லில்லாஹ்.

 

சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் உலகம் முழுவதும் வாழும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் இரத்ததான சேவையில் அல் அய்ன் ஜமாஅத்துத் தவ்ஹீத் தம்மையும் இப்போது இணைத்துக்கொண்டுள்ளது.

 

 

மிகக்குறுகிய நாட்களில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த இரத்ததான நிகழ்ச்சியில் பெண்கள் மற்றும் பிற மத சகோதரர்கள் உட்பட பலர் மிக ஆர்வத்துடன் கலந்து கொண்டு இரத்ததானம் செய்தனர். இரத்ததான ஏற்பாட்டை முதல் முறையாக செய்திருந்தாலும் சமுதாய மற்றும் மார்க்கப்பணிகளில் அல் அய்ன் ஜமாஅத்துத் தவ்ஹீத் முழு வீச்சில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது என்பதை நாம் அறிவோம். அல்லாஹ்வுக்கே எல்லா புகழும். 

 

 

        Email Us        |     FeedBack           |    Introduce To Friends    |   Advertisements   |   Tntj.net - 2005