UAE  தாரிப் அருகில் TNTJ யின் புதிய கிளை உதயம்

  UAE  நிர்வாகிகள் துவக்கி வைத்தனர்
  புகைப்படங்களுடன் செய்தி...

 

கடந்த 2.3.2008 அன்று அபுதாபியிலிருந்து தாரிப் செல்லும் வழியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள NCE கேம்பில் அபுதாபி தவ்ஹீத் ஜமாஅத்தின் புதிய கிளை தொடங்கப்பட்டது.எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!

இந்நிகழ்ச்சியின் போது மே 10,11 தஞ்சை ஏகத்துவ எழுச்சி மாநாடு சம்பந்தமான சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முதலில் பேசிய யூசுப்அலி அவர்கள் ஜமாத் செய்துவரும் மார்க்கம் மற்றும் சமுதாய பணிகள் குறித்து போசினார். பின்னர் பேசிய UAE தவ்ஹீத் ஜமாஅத்தின் ஒருங்கினைப்பாளர் ஹாமின் இபுராஹீம் அவர்கள் ஏகத்துவ எழுச்சி என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினர்.இந்நிகழ்ச்சிக்கு தவ்ஹீத் ஜமாஅத்தின் துனை தலைவர் அ.ஷேக்முஹம்மது தலைமை தாங்கினார்;.
 


 


புதிய இடம் புதிய கிளை என்பதால் இந் நிகழ்ச்சிக்கு கனிசமான சகோதரர்கள் வந்திருந்தனர். இக் கிளையின் தற்காலிக நிர்வாகிகளாக ஷாஜஹான், சாதிக் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.இந் நிகழ்சிக்கான ஏற்பாட்டை முஸாபா கிளை தலைவர் அப்துல்லாஹ் மற்றும் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.


 

 

        Email Us        |     FeedBack           |    Introduce To Friends    |   Advertisements   |   Tntj.net - 2005