துபை, ஷார்ஜா அபுதாபி, குவைத் போன்ற இடங்களில் நடைபெற்ற எழுச்சிமிகு தவ்ஹீ நிகழ்ச்சிகள்

 வளைகுடா TNTJ ஏற்பாடு செய்த நிகழ்ச்சிகளில் பெரும் திரலாக கூடிய மக்கள்!

 வளைகுடா பயணம் மேற்கொண்ட எஸ்.எம் பாக்கர் மற்றும் கோவை ஜாஃபர் ஆகியோர் பங்கேற்பு
 புகைப்படங்களுடன் செய்தி...


சொந்த ஊர், நட்பு மற்றும் குடும்ப ஏக்கங்களை மனதில் சுமந்து கொண்டு குடும்பத்தினருக்காக அயராமல் வளைகுடாவில் உழைக்கும் நம்முடைய சமுதாய சொந்தங்களுக்கு, வல்ல ரஹ்மான் திருமறையில் சொல்லி காட்டியபடி மனதிற்கு நிம்மதியை தரும் இறை நினைவுகளை பகிர்ந்து கொள்வதில் இருக்கும் ஆனந்தத்தை சொற்களிலோ அல்லது எழுத்துகளிலோ வடிக்க முடியாது. இறை நினைவாலே மனங்கள் அமைதி பெறுகின்றன என்ற இறை வாக்கு அலை பாயும் ஏக்க மனதிற்கு ஓர் அருமருந்து என்றால் அது மிகையல்ல.

அதுவும், மார்க்க போதனைகளுடன், கடல் கடந்து வாழ்ந்தாலும் தாயகத்தில் இருக்கும் நம்முடைய சகோதரர்களின் சமுதாய நிலைகளை தெரிந்து கொள்வதில் இருக்கும் ஆர்வத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில பொதுச்செயலாளர் சகோ.எஸ்.எம்.பாக்கர் மற்றும் மாநிலச் செயலாளர் சகோ.கோவை ஜாபர் அவர்களின் சமீபத்திய வளைகுடா பயணத்தின் போது கண்கூடாக காண நேர்ந்தது. 

 

 15-02-2008 முதல் 14-03-2008 வரை ஒரு மாத காலம் தொடர் நிகழ்ச்சிகளின் மூலமாக நம்முடைய சகோதரர்களிடையே ஏற்பட்ட தாக்கம் மற்றும் ஒருங்கிணைப்பு, திருக்குர்ஆன் மற்றும் நபிமொழிகளின் அடிப்படையில் தான் இந்த மாற்றங்கள் நிகழும் என்பதை நிதர்சனமாக நிருபித்து காட்டியது.

ததஜவின் மாநில பொதுச் செயலாளர் சகோ.எஸ்.எம்.பாக்கர் மற்றும் மாநில செயலாளர் சகோ.கோவை ஜாபர் ஆகியோரின் யு.ஏ.இ, கத்தார் மற்றும் குவைத் பயண விபரம்:
 

 

 நாள்   நிகழ்ச்சி நடந்த இடம்


15-02-2008 துபை – தேரா கோட்டைப்பள்ளி
21-02-2008 அபுதாபி மர்கஸ்
22-02-2008 அபுதாபி மர்கஸ் - யு ஏ இ அனைத்து மண்டல கூட்டம்
22-02-2008 அபுதாபி முஸஃபாவில் ஹைகாட் பகுதியில் தமிழ் ஜும்ஆ
22-02-2008 துபை சத்வா
23-02-2008 ராஸல் கைமா
24-02-2008 அபுதாபி முஸஃபா கிளீன்கோ கேம்ப்
25-02-2008 துபை – சோனாப்பூர்
26-02-2008 ஷார்ஜா சனாய்யா
27-02-2008 அல் அய்ன்
28-02-2008 துபை அல் கூஸ்
28-02-2008 கீழக்கரை தவ்ஹீத் ஜமாஅத் ஒருங்கிணைப்பு கூட்டம்
29-02-2008 அஜ்மான்
29-02-2008 ஷார்ஜா
02-03-2008 புஜைரா மண்டலம் - நிர்வாகிகள் சந்திப்பு
03-03-2008 அபுதாபி தாஸ் ஐலேண்டில் உள்ள நம் சகோதரர்களுக்காக ழடெiநெ-ல் ஒரு மணிநேர உரை
04-03-2008 முதல் 07-03-2008 கத்தார் பயணம்
08-03-2008 முதல் 09-03-2008 குவைத் பயணம்
13-03-2008 உம்முல் குவைன் நிர்வாகிகள் தேர்வு
14-03-2008 துபை ஜே டி சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டு சோனாப்பூரில் நடந்த அனைத்து மண்டல மாநாடு

 

போதிய அவகாசமும், அறிவிப்புமின்றி துபை தேராவிலுள்ள கோட்டைப்பள்ளியில் நடந்த முதல் கூட்டத்தில் கலந்துக்கொண்ட மக்கள் கூட்டம் நம் சகோதரர்களின் ஒருங்கிணைப்பு மற்றும் கூட்டமைப்பின் பலத்தை காட்டியது. வாய் வழி அறிவிப்புகளே இவ்வளவு கூட்டத்தை கூட்டியது நம் சகோதரர்களின் கொள்கை உறவின் வலுவை பறைசாற்றியது அல்ஹம்துலில்லாஹ்.

வழக்கம் போலவே, சில புல்லுருவிகள் இந்நிகழ்ச்சிகளுக்கு தடை ஏற்படுத்த முயன்றாலும் இச்சூழ்ச்சிகளையெல்லாம் தவிடு பொடியாக்கிய மாபெரும் சூழ்ச்சியாளன் வல்ல ரஹ்மான் நிகழ்ச்சிகளை சிறப்பாக நடைபெற உதவி செய்தான். எல்லா புகழும் வல்ல ரஹ்மானுக்கே.

கூட்டங்களில் தமிழக முஸ்லிம்களிடையே, கணிசமான அளவில் இலங்கை சகோதரர்கள் எல்லா மண்டலங்களிலும் கலந்துக்கொண்டது இலங்கையில் தவ்ஹீத் ஜமாஅத் ஏற்படுத்தி வரும் தாக்கத்தை உணர்த்தியது. தடைகளையும், நாடுகளையும் கடந்துச்சென்று உள்ளங்களை வெல்ல சக்தி படைத்த ஒரே ஆயுதம் திருக்குர்ஆனும, நபிமொழிகளும் மற்றும் அதை எந்த எதிர்ப்புகளுக்கு அஞ்சாமல் நெஞ்சுறுதியுடன் எடுத்துரைப்பது தான் என்பதை மக்கள் கூட்டம் உணர்த்தியது.

இறுதியாக சோனாப்பூர் பகுதியில் நடந்த அனைத்து மண்டல மாநாடு அனைத்து மண்டல கொள்கை சகோதரர்களின் சங்கமமாக காட்சியளித்தது. வாயளவில் தவ்ஹீத் பேசுவோர் தவ்ஹீதிற்கு எதிராக வைக்கப்படும் வாதங்களுக்கு இம்மாநாட்டில் தன் உரை மூலமாக அமீரக ஒருங்கிணைப்பாளர் சகோதரர் ஹாமின் இப்ராஹீம் தக்க பதிலளிக்க, தவ்ஹீத் ஜமாஅத்தின் அரும்பணிகளை சகோதரர் ஜாபர் அவர்கள் விளக்க, இறுதியாக தஞ்சை வல்லத்தில் இன்ஷா அல்லாஹ் மே 10-11 தினங்களில் நடைபெறவுள்ள தவ்ஹீத் எழுச்சி மாநாட்டிற்கான அவசியத்தை எடுத்துரைத்தார் சகோ.எஸ்.எம் பாக்கர். இம்மாநாட்டிற்கு துபை ஜமாஅத்துத் தவ்ஹீத் தலைவர் சகோ.ஜமாலுதீன் தலைமை தாங்கினார்கள்.

தங்களுக்குத்தான் மக்கள் பலம் இருக்கிறது என்று வெற்று கோஷம் போடுவோருக்கு மத்தியிலே, இம்மையில் எந்த பேரையும் எதிர்பாராமல் மறுமை வெற்றியே ஒரே குறிக்கோள் என்பதற்காக இவ்வளவு பெரும் கூட்டம் இம்மாநாட்டில் கூடியது வாழ்வு என்றால் மறுமை வாழ்வு தான். உலகத்திலே நாம் செய்யும் பணிகளுக்கு எந்த கைமாறும் தேவையில்லை என கொள்கை சகோதரர்கள் பிரகடனப்படுத்துவது போல் இம்மாநாடு காட்சியளித்தது.

பல அரும் பணிகளை செய்து வரும் தவ்ஹீத் ஜமாஅத்தை தனி மனித வழிபாட்டு கூட்டம் என வஞ்சக விமர்சனை செய்யும் குறுமதியாளர்களுக்கு தூய இஸ்லாத்தை அதன் தூய வடிவில் எடுத்துரைத்தால் ஏற்படும் தாக்கத்தை இக்கூட்டங்கள் தௌ;ளத்தெளிவான பாடத்தை போதித்தன. எல்லாப்புகழும் வல்ல ரஹ்மானுக்கே.



 




 

        Email Us        |     FeedBack           |    Introduce To Friends    |   Advertisements   |   Tntj.net - 2005