துபையில் நடைபெற்ற மாபெரும் ஏகத்துவ எழுச்சி கூட்டம்!

 தாயகத்திலிருந்து சென்ற பொதுச் செயலாளர் பாக்கர் மற்றும் மாநிலச் செயலாளர் ஜாஃபர் சிறப்புரை!
 ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!

கடந்த 15.02.2008 வெள்ளிக் கிழமை துபை TNTJ சார்பாக தமிழ் முஸ்லிம்கள் திரளாக வாழக்கூடிய தேய்ரா பகுதியில் அமைந்துள்ள கோட்டைப் பள்ளியில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

 

துபை ஜமாஅத்துத் தவ்ஹீத் தலைவர் B. ஜமாலுத்தீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தாயகத்திலிருந்து வருகை தந்துள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில பொதுச் செயலாளர்      S.M. பாக்கர் அவர்கள் 'ஏகத்துவம் அழைக்கிறது' என்ற தலைப்பிலும், மாநிலச் செயலாளர் கோவை ஜாஃபர் அவர்கள் 'தமிழக முஸ்லிம்களும் டி.என்.டி.ஜேவும்' என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்.

 

 

 போதுமான விளம்பரமின்றி நடைபெற்ற இந்நிகழ்ச்சியல் பள்ளியின் மேல் தளத்தில் போதிய இடமின்றி மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் இன்ஷாஅல்லாஹ் தமிழகத்திலே வரும் மே 10,11 ஆகிய தினத்தில் நடைபெற உள்ள தவ்ஹீத் ஏழுச்சி மாநாட்டில் நாமும் கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் பலரிடம் மேலோங்கியிருந்ததை காண முடிந்தது.


 

        Email Us        |     FeedBack           |    Introduce To Friends    |   Advertisements   |   Tntj.net - 2005