தடைகளை தகர்த்தெரிந்து குவைத்தில் நடந்தேறிய தவ்ஹீத் கூட்டங்கள்!

  கடந்த வெள்ளி அன்று ஒரே நாளில் மூன்ற இடங்களில் மாபெரும் இஸ்லாமிய பிரச்சாரக் கூட்டங்கள்!

  மாநிலப் பொதுச் செயலாளர் எஸ்.எம் பாக்கர் மற்றம் செயலாளர் கோவை ஜாஃபர் சிறப்புரை!

  பெரும் திரளாக கலந்து கொண்ட மக்கள் கூட்டம்.

  குவைத் அங்கில பத்திரிக்கையில் வெளியான செய்தி.

  புகைப்படங்களுடன் செய்தி...

 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டலம் மற்றும் கிளை சார்பாக சொற்பொழிவு நிகழ்ச்சிகள் செய்யப்பட்டிருந்தது. அதில் தாயகத்திலிருந்து வருகை தந்திருந்த மாநில பொதுச்செயலாளர் சகோ S.M பாக்கர் அவர்களும் மற்றும் மாநில செயலாளர் சகோ. கோவை ஜாபர் அவர்களும் கலந்துக் கொண்டு சிறப்புரையாற்றினர்.

கடந்த வெள்ளி (07-03-2008) அன்று ஜும்மாவிற்கு பிறகு பயான் கிளையில் நடைபெற்ற நிகழ்ச்சி, அஷர்க்கு பிறகு ஜஹ்ரா கிளை ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி, இஷாவிற்கு பிறகு குவைத் மண்டலம் சார்பாக முர்காப் சிட்டியில் ஏற்பாடு செய்யப்பட் நிகழ்ச்சி ஆகிய அணைத்து நிகழ்ச்சியிலும் சகோ. S.M பாக்கர் மற்றும் சகோ. கோவை ஜாபர் அவர்களும் சிறப்புரையாற்றினர். இதில் பெரும் திரளாக மக்கள் கலந்து கொண்டனர்.




இந்த நிகழ்ச்சிகள் யாவும் நடைபெற கூடாது என்ற தீய நோக்கோடு அதை எப்படியாவது தடுத்துவிட வேண்டும் என்று முயற்சி செய்த பலரும் தோல்வியுற்றனர்.

சு10ழ்சிசியாளனுக்கெல்லாம் சூழ்ச்சியாலன் அல்லாஹ் என்பதை பெரும் எழுச்சியோடு நடந்து முடிந்த இந்நிகழ்ச்சிகள் நிருபித்தன. எல்லாப் புகழும் ஏக இறைவனுக்கே.

அல்லாஹ்வின் ஒளியை தனது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர் (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்துவான். (அல்குர்ஆன் 61:8)
 

இந்நிகழ்ச்சி முஸ்லிம்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதை தொடர்ந்து குவைத்தில் வெளியாகும் பிரபல பத்திரிக்கையான குவைத் டைம் ல் இந்நிகழ்ச்சி செய்தியாக வெளியானது:

 

10 ஆம் தேதி வெளியான செய்தி

 

 

 

 

16 ஆம் தேதி வெளியான செய்தி

 

 

மேலும் இந்த செய்தி அரப்டைம்ஸ் பத்தரிக்கையிலும் வெளியானது

 


 

        Email Us        |     FeedBack           |    Introduce To Friends    |   Advertisements   |   Tntj.net - 2005