கத்தர் பயணத்தில் எஸ்.எம் பாக்கர் மற்றும் கோவை ஜாஃபர் அவர்களின் எழுச்சி மிகு தவ்ஹீத் பிரச்சாரங்கள்!
 கத்தரின் முக்கிய பகுதிகளில் நடைபெற்ற தவ்ஹீத் நிகழ்ச்சிகள்!
  புகைப்படங்களுடன் செய்தி
 

 

 

கடந்த 4-3-2008 அன்று பொது செயலாளர் சகோதரர் பாக்கர் அவர்களும் மாநில செயலாளர் கோவை ஜாபர் அவர்களும் கத்தருக்கு வருகை புரிந்தார்கள்.

முதல்நாளென்று QITC நிர்வாகிகளின் அமர்வு சகோதரர் பாக்கர் மற்றும் கோவை ஜாபர் அவர்களுடன் நடந்தது.

மையத்தின் செயல்பாடுகளை QITC செயலாளர் மஸ்ஊத் அவர்கள் எடுத்து கூறினார்.
மையத்தின் தலைவர் சகோததரர் லியாகத் அலி மாநில நிர்வாகிகளின் வருகை எதிர்வரும் தவ்ஹீத் மாநாட்டிற்கு கத்தர் வாழ் தமிழ் சகோதரர்களை திரட்டவும் தங்களின் பங்களிப்பை ஆர்வத்துடன் செலுத்தவும் உதவும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

5-03-2008 அன்று கத்தர் இந்திய தவ்ஹீத் மையம் செயல்வீரர்கள் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. இதில் ததஜ.பொது செயலாளர் அவர்கள் அமைப்பின் முக்கிய அங்கமாக திகழும் செயல் வீரர்கள் தங்களுடைய ஒய்வு நேரங்களை இம்மையிலும் மறுமையிலும் பயன் தரக்கூடிய வகையில் தாவாவில் தங்களை எந்தெந்த வகையில் இணைத்துக் கொள்ள வேண்டும் விளக்கி கூறினார்;.

செயல் வீரர்கள் மண்டல ரீதியாக ஆற்ற வேண்டிய பணிகளையும் மற்றும் நிர்வாகிகள் கையாள வேண்டிய முறைமைகளையும் பற்றியும் தன்னுடைய உரையில் தலைமையில் கடைபிடிக்கப்படும் அனுபவத்தை பகிர்ந்துக்கொண்டார்.

QITC தனியாக ஒரு கட்டிடத்தை வாடைக்கு எடுத்து 150பேர்க்கு மேல் அமர்ந்து பயான் கேட்க கூடிய வகையில் பெண்களுக்கு தனி வசதியுடன் QITC அரங்கத்தை ஏற்படுத்தியிருப்பது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவும் மேன்மேலும் மையம் தாவாவில் வளர்ச்சியடைய இறைவனிடம் பிராத்திப்பாதாகவும் கூறினார்.

6-3-2008 அன்று சிறப்பு சொற்பொழி கூட்டம் வியாழன்று QITC அரங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.எவ்வித விளம்பரமில்லாமல் குறுகிய கால இடைவெளியல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இக்கூட்டம் மக்கள் வருகையால் இஷா தொழுகையின் போதே அரங்கம் நிரம்பி வழிந்தது.QITC அலுவலத்திலும் வந்துக்கொண்டிருக்கும் மக்களை அமர வைத்து மேலும் அதுவும் பற்றாகுறையானதால் மேல் மாடியில் குடியிருக்கும் ஒரு சகோதரரின் அறையிலும் அரங்கத்தின் வெளியேயும் இருக்கைகள் போடப்பட்டு பயான் கேட்க வசதி செய்யப்பட்டது.முழு கடிடத்திலும் 5 தொலைகாட்சி பெட்டிகள் வைக்கப்பட்டு சிறப்பான ஒலிஒளி அமைப்பு செய்திருந்தது ஒரு மினி மாநாட்டின் தோரணையை ஒத்திருந்தது.இதில் 300க்கும் மேற்பட்ட சகோதரர்களும் 50க்கும் மேற்பட்ட பெண்கள் குழந்தைகள் கலந்துக் கொண்டார்கள்.

நிகழ்ச்சியின் தொடக்கத்தில் உரையாற்றிய சகோததர் கோவை ஜாபர் அவர்கள் ததஜ ஆற்றிவரும் அரும்பணிகள் பற்றி விளக்கி கூறினார்.கொள்கை சகோதரர்கள் ஒவ்வொரும் தம்மால் இயன்ற தாவா பணிகளை செய்ய வேண்டும் என்று கூறினார். ததஜ குருதி கொடையில் தமிழகத்தில் இரண்டாவது முறையாக முதலிடத்தை பெற்றியிருக்கிறது என்றும் கூறினார்.


ததஜ பொது செயலாளர் சகோதரர் பாக்கர் அவர்கள் உரையை கேட்க தோஹாவின் அனைத்து பகுதியிலிருந்தும் இந்திய இலங்கை சேர்ந்த தமிழ் சகோதர சகோதிரிகள் திரண்டு வந்திருந்தினர்.அதில் பல பேர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு QITC மர்கஸ் அமைந்திருக்கும் நஜ்மா பகுதியை கேட்டறிந்து ஆவலுடன் வந்திருந்தனர்.

தவ்ஹீத் கடந்து வந்த பாதை என்ற தலைப்பில் சகோதரர் பாக்கர் அவர்கள் உரை நிகழ்த்தினார். 20 வருடகால தவ்ஹீத் எழுச்சியை கூறிக்கொண்டே வரும் போது முழு அரங்கமே குண்டூசி சத்தமுமின்றி வியப்பில் ஆழ்ந்து கிடந்தது. வளைகுட வாழ் பணியாளர்களை நேரில் கண்டு அவர்களிடம் அளவளாவி அவர்களின் துயரங்களையும் தொலைத்துவிட்ட வாழ்கையையும் கேட்டறிந்து அதை அப்படியே அரங்கத்தில் படம் பிடித்து காட்டும் போது பெண்களில் சிலர் கண்ணீர் விட தொடங்கினார்கள்.


முஸ்லீம்களின் கல்வி மற்றும் பொருளாதார முன்னேற்றத்தில் ததஜ உறுதியாக பாடுபட்டு கொண்டிருப்பதாகவும் மேலும் பாடுபட எத்தகைய தியாகமும் செய்ய தயராக இருப்போம் என்றும் சொல்லும்போது கத்தர் மண்டல ததஜ உறுப்பினர்கள் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் அசைக்கமுடியாத நம்பிக்கையும் தியாக உணர்வையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியது எனலாம்.


தவ்ஹீத் மாநாட்டின் சிறப்பம்சங்களையும் அதனால் விளையக்கூடிய பயன்களையும் விரிவாக எடுத்து கூறினார்.மாநாடு வெற்றியடை எல்லாலோரும் தத்தமது துஆவில் நினைவில் கொள்ளவேண்டும் எனவும் அதற்கான பெரும் பொருட்செலவு காத்துகிடக்கிறது எனவும் எல்லா சகோதரர்களும் தங்களது பங்களிப்பை இறைவனின் வழியில் நன்மை பெருக்க கூடிய இப்பணிக்கு தாராளமாக தந்து உதவுமாறு கேட்டுக்கொண்டார்.

சகோதரர் பாக்கரின் அவர்களின் உரை இறுதி கட்டத்தை வந்தடையும் முன்னரே பல சகோதரர்கள் மேடைக்கு வந்து மாநாட்டிற்கான நன்கொடையை வழங்கினார்கள். அதில் முக்கிய செய்தி என்னவென்றால் முன்பின் அறிமுகமேயில்லாத மாற்றுமத சகோரர் பழனிசாமி என்பவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முழு உரைகளையும் கேட்டுவிட்டு 100 ரியால் நன்கொடையளித்தார் என்பது தான். இது போன்ற எண்ணற்ற மாற்று மத சகோதரர்கள் சத்திய பாதையை ஏற்க வேண்டும் என்பது தானே தஞ்சை தவ்ஹீத் மாநாட்டின் தலையாய நோக்கம் . நம்முடைய நன்நோக்கதிற்கு வல்ல ரஹ்மான் இம்மையிலும் மறுமையிலும் நற்கூலி வழங்குவானாக!..

 

 


 

        Email Us        |     FeedBack           |    Introduce To Friends    |   Advertisements   |   Tntj.net - 2005