ராஸ் அல் கைமா வில் மார்க்க சொற்பொழிவு கூட்டம்

 எஸ்.எம் பாக்கர் கோவை ஜாஃபர் சிறப்புரை!
 புகைப்படங்களுடன் செய்தி...

 

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் சகோதரர் எஸ். எம். பாக்கர் மற்றும் மாநிலச் செயலாளர் சகோதரர் கோவை ஜாஃபர் அவர்களும் அமீரகத்தில் பல இடங்களில் முகாமிட்டு பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

அதன் தொடர்ச்சியாக கடந்த 23-02-08 சனிக்கிழமை இரவு ராஸ் அல் கைமா NCE CAMP பள்ளிவாசலில் உரையாற்ற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பெருந்திரளாக பொதுமக்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சிக்கு ராஸ் அல் கைமா தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைவர் சகோதரர் ஹாஜி முஹம்மது தலைமை தாங்கினார்.

 

'சமுதாயமும் நாமும்' என்ற தலைப்பில் சகோதரர் கோவை ஜாஃபர் அவர்களும், 'ஏகத்துவ எழுச்சி' என்ற தலைப்பில் சகோதரர் எஸ். எம். பாக்கர் அவர்களும் சிறப்புரையாற்றினார்கள். இறுதியில் ராஸ் அல் கைமா தவ்ஹீத் ஜமாஅத்தின் செயலாளர் சகேதரர் ஸஅது ஷா நன்றியுரைத்தார். பிரார்தனையுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது. எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!


 


 

        Email Us        |     FeedBack           |    Introduce To Friends    |   Advertisements   |   Tntj.net - 2005