இராமேஸ்வரத்தில் நேற்று நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

 ஆண்கள் பெண்கள் என அனைவரும் பங்கேற்பு!
 பத்திரிக்கைகளில் வெளியான செய்தி!
 புகைப்படங்களுடன் செய்தி...

 

இன்று காலை 11.00 மணியளவில் இராமநாதபுரம் இராமேஸ்வரம் சாலையில் அமைந்துள்ள அரசு பணிமனை (MPTC) முன் தஞ்சை மாவட்டம் அவனியாபுத்தில் முருகேசன் என்ற சகோதரர் கொலை வழக்கில் அப்பாவி முஸ்லிம்களான சாதிக், இமாம் அலி மீது பொய்வழக்குப் போட்டு கடந்த 1 ½ மாதகாலமாக சிறையில் வாடிவருகின்ற அப்பாவிகைள விடுதலை செய்யக் கோரியும், அப்பாவிகள் மீது பொய்வழக்குப் போட்ட காவல்துறை ஆய்வாளர் பழனிச்சாமியை உடனடியாக பணி நீக்கம் செய்யகோரியும் அதற்கு உடந்தையாக இருந்த உதவி கண்காணிப்பாளர் ரொஸோரியோ மீது இலாகா பூர்வ நடவடிக்கை எடுக்கக் கோரியும் மாவட்ட தலைவர் எம். அப்துல் ஹமீது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

 

 

 

சுமார் 400க்கும் அதிகமான ஆண்களும் 100 பெண்களும் கலந்து கொண்டு கைகளை உயர்த்தி கோசமிட்டது காண்போரை வியக்க வைத்தது. இதில் மாநில பேச்சாளர் மவ்ளவி தாஹா, மாவட்ட தலைவர் எம். அப்துல் ஹமீது, மவ்ளவி தமீம் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்கள். மாவட்ட செயலாளர் து. ஆ. ஆரிப் கான், துணைத் தலைவர் முபாரக் அலி, பொருளாலர் மேலக்கோட்டை சைபுல்லா, துணைச் செயலாளர் மாஹின், காதிரியா முஸ்தபா, மாணவர் அணி இம்ரான் கான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

இந்த செய்தி பத்திரிக்கைளில் வெளியானது:

 

 

 

 

 

செய்தி:
இராமநாதபுரம் மாவட்டம் TNTJ

 

 

        Email Us        |     FeedBack           |    Introduce To Friends    |   Advertisements   |   Tntj.net - 2005