இராமநாதபுரம் எஸ்.பி பட்டிணத்தில் TNTJ  யின் புதிய கிளை

  மாவட்டத் தலைவர் துவக்கி வைத்தார்.

  நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு!

 

 

இராமநாதபுரம் மாவட்டம் எஸ். பி. பட்டிணத்தில் மாவட்ட தலைவர் எம். அப்துல் ஹமீது தலைமையில் புதிய கிளை திறக்கப்பட்டது. தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கைகள், குர்ஆன் ஹதீஸ் என்றால் என்ன? அதனை எங்கனம் பின்பற்றவேண்டும், உறுப்பினர்கள் கடைபிடிக்க வேண்டிய அடிப்படை சட்டங்கள், நிர்வாகியான பின் நமது நடவடிக்கை எப்படி அமையவேண்டும் என்பன போன்றவைகளை மாநில் பேச்சாளர் மவ்ளவி முஹம்மது தமீம், மவ்ளவி முஜாஹித், மவ்ளவி தாஹா ஆகியோர் எடுத்துரைத்தார்கள்.

இணைவைத்தல் என்ற மாபாவத்தின் பறிப்பிடங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருகின்ற இந்த ஊரில் ந. மு. ஹாஜியார் அவர்களது வழிகாட்டலின் பேரிலும், தொண்டி கிளை சகோதரர்களின் இடைவிடாத முயற்சியாலும் பல எதிர்ப்புகள், கொலை மிரட்டல்களுக்கு மத்தியில் பெரும் திரளான மக்கள் கூட்டத்துடன் மாவட்ட நிhவாகிகள் ஆரிப்கான், அபுபக்கர் மாஹீன், காதர் ரிஸ்வான், இருமேனி மாலிக்பாய், மற்றும் சகோதரர் கலீபுல்லா தலைமையில் தொண்டி நகர் நிர்வாகிகள் கோட்டைபட்டிணம் கிளை நிர்வாகிகளும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.



இதன் நிர்வாகிகள் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

1 – தலைவர் R.N.A ஹைதர் அலி
2 – செயலாளர் P. M.A முஹம்மது முஹைதீன்
3 – பொருளாலர் P. S. A. ஷாஹூல் ஹமீது (எ) அப்துல் ஹமீது
4 - துணைத் தலைவர் K. M. A. அமானுல்லா
5 – துணைச் செயலாளர் A. N. S இஸ்ஹாக்
6 – மாணவர் அணிச் செயலாளர் A.ஐயூப் கான்
7 – மருத்துவ அணிச் செயலாளர் H. கமருதீன்
8 – வர்த்தகர் அணிச் செயலாளர் A. முஹம்மது ரபீக்
9 – தொண்டர் அணிச் செயலாளர் A ஹாஜா முஹைதீன்


 

        Email Us        |     FeedBack           |    Introduce To Friends    |   Advertisements   |   Tntj.net - 2005