பணைக்குளத்தில் மாபெரும் மார்க்க விளக்கக் கூட்டம்!

  உள்ளூர் ஜமாஅத்தின் பல்வேறு தடைகளை தகர்ந்தெரிந்து நடைபெற்றது.

  அல்ஹம்துலில்லாஹ்!

  புகைப்படங்களுடன் செய்தி...
 

22.03.2008 ஆம் நாள் சனிக்கிழமை மாலை 6.45 மணிக்கு பனைக்குளம் பேருந்து நிலையம் அருகில் இஸ்லாமிய மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம் இறைவன் துணைகொண்டு தொடங்கியது.

 

கடந்த 15 நாட்களாக விடாது பெய்த மழையால் கூட்டம் நடக்குமா? நடக்காதா? என்ற பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியிலும், பனைக்குளத்தில் உள்ள இரண்டு ஜமாஅத்துக்கள் இடைவிடாமல் இக்கூட்டத்தை நிறுத்தியாக வேண்டும் என்ற ஒரே குறிக்கோலுடன் சென்னையில் இருந்து ஒருபுறம் மாநில காவல்துறை அதிகாரிகள் மூலமும், மற்றொறுபுறம் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மூலமும் இடைவிடாது முயற்சி செய்துவந்தனர். இருப்பினும் இறைவன் இத்தடைகளைத் தகர்த்தெரிந்து, இக்கூட்டத்தை நாம் எதிர்பார்த்ததைவிட பண்மடங்கு மிகச் சிறப்பாக நடத்திக்காட்டினான். கூட்டம் அளவுக்கு அதிகமாக வந்ததால் உடனடியாக புதுவலசையில் இருந்து இரவோடு இரவாக நாற்காளிகளைக் கொண்டுவந்து ஒரளவுகூட்டத்தை சமாளித்தனர் தொண்டரணியினர்.

சகோதரர் அமீர்தீன் (கிளைத் துணைத்தலைவர் ) அவர்களது வரவேற்புரையுடன் தொடங்கி மவ்ளவி அர்சத் அலி M.I.Sc அவர்கள் தற்பொழுது பனைக்குளத்தில் தவ்ஹீத் சகோதரர்களுக்கு ஜமாஅத்தினர்கள் செய்துவரும் இடையூறுகளையும் அதற்கு மாறாக இறைவன் கொடுத்துவரும் வெற்றிகளையும் விளக்கிக் கூறியபின், கீழை ஆலிமா சகோதரி யாஸ்மீன் அவர்கள் சீரியலால் சீரழியும் பெண்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

 

 

முதல் அமர்வு இஷா பாங்கிற்குப்பின் நிறைவுற்றது. உளுச்செய்வதற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தண்ணீர் தொழும் இடவசதி செய்து இருந்ததால், அனைவரும் இஷாத் தொழுகையை நிறைவு செய்ததற்குப் பின் மாவட்ட தலைவர் எம். அப்துல் ஹமீது அவர்கள் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் எதற்காகத் தோற்றுவிக்கப்பட்டது, அதன் சேவைகள் என்ன? அதனால் பனைக்குளத்தில் உள்ளவர்கள் அடைந்துவரும் பயன் என்ன? எதிரிகளுக்கு உதவும் ஜமாஅத்தான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்பதை ஆதாரத்துடன் விளக்கிக் கூறி இரண்டாம் அமர்வை தொடங்கினார்கள்.

 

 

பின் மாநிலப் பேச்சாளர் மவ்ளவி K.S அப்துர்ரஹ்மான் பிர்தவ்ஸி அவர்கள் மாமனிதர் நபிகள் நாயம் என்ற தலைப்பில் சுமார் 45 நிமிடங்கள் உரையாற்றினார்கள். நபிகளாரை எங்கனம் நாம் முன்மாதிரியாகக் கொள்ளவேண்டும் தற்பொழுது எவ்வாறு சுன்னத் வல் ஜமாஅத் என்ற பெயரை உபயோகிக்கன்றவர்கள் செய்துவருகின்றார்கள் என்பதை ஆதாரத்துடன் விளக்கிக் கூறி, நபிகளாரின் சொல் செயலில் இருந்துதான் நாம் முன்மாதிரியை பெறவேண்டும் என்று சான்றுகளுடன் விளக்கிக் கூறியபின் கூட்டத்தின் தீர்மானங்களை சகோ. முஹம்மது யாக்கூப் (துணைத் தலைவர்) படிக்க மக்கள் அனைவரும் தங்களது கையை உயர்த்தி அல்லாஹூ அக்பர் என்று உரத்துக்கூறி ஆமோதித்தனர்.

 

 

இறுதியாக மாநிலச் பொதுச் செயலாளர் சகோ. S.M பாக்கர் அவர்கள் இன்றைய சமுதாயமும் ஈருலக வெற்றியும் என்ற தலைப்பில் நபிகளாருக்கு வஹி வந்ததில் இருந்து இன்றைய நமது மக்களின் நிலைகளையும் மிகத் தெளிவாக தனக்கே உறிய பாணியில் தெளிவாக விளக்கிக் கூறினார்கள். மக்கள் மிகவும் ஆர்வமாக கேட்டுக்கொண்டிருந்ததைக் கண்ட காவல்துறை ஆய்வாளர் குறிப்பிட்ட நேரத்தை விட 30 நிமிடங்கள் கூட்டிக்கொடுக்க இன்னும் கூடுதலாக சமுதாய சீர்கேடு மற்றும் சீரழிவுகளை விளக்கிக் கூறி தவ்ஹீதின் பால் மக்களை அழைத்தார்கள். பின் சகோ. அஸ்வர்தீன் (செயலாளர்) அவர்களது நன்றியுரைக்குப்பின் துஆவுடன் கூட்டம் இனிதே நிறைவுற்றது.

நிகழ்ச்சி நிறைவுற்ற ஒரு மணி நேரத்திற்குப்பின் வழக்கம் போல் மழை தொடர்ந்தது.


 

        Email Us        |     FeedBack           |    Introduce To Friends    |   Advertisements   |   Tntj.net - 2005