நேற்று இராமநாதபுரத்தில் மாவட்ட பொதுக்குழு.

  மாநிலத் தலைவர் பி.ஜே தலைமை தாங்கினார்.

  புதிய நிர்வாகம் தேர்வு.

  புகைப்படங்களுடுன் செய்தி...
 

 

இராமநாதபுரம் நகரில் இராமநாதபுரம் இராமேஸ்வரம் சாலையில் அமைந்துள்ள வலம்புரி மஹாலில் மாநில தலைவர் சகோ. பி. ஜைனுல் ஆபிதீன் அவர்கள் தலைமையில் மாவட்ட பொதுக்குழு மாலை 4.30 மணிக்குத் தொடங்கியது.

 

இதில் அனைத்து கிளை நிர்வாகிகள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களும் கலந்து கொண்டனர். துவக்கத்தில் மாநில தலைவர் அவர்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில தலைமை ஆற்றிவரும் மிக முக்கிய சேவைகளை விளக்கிக் கூறியபின் மாவட்ட நிர்வாகம் எங்கனம் செயல்படவேண்டும், தவ்ஹீத் ஜமாஅத்தின் குறிக்கோள் நோக்கம் ஆகியவைகளை விளக்கிக் மாவட்டம் நிர்வாகிளது தேர்தல் நடைபெற்றது.

 

இதில் மாவட்ட தலைவராக பனைக்குளம் எம்.அப்துல் ஹமீது அவர்களும், துணைத் தலைவராக சக்கரக்கோட்டை முபாரக் அலி அவர்களும், செயலாளராக நரிப்பையூர் ஜெ. எம். ஆரிப்கான் அவர்களும் பொருலாளராக மேலக்கோட்டை சைபுல்லா அவர்களும், துணைச் செயலாளர்களாக இருமேனி மாலிக், இராமநாதபுரம் மாஹின் அபுபக்கர் ஆகியோர்களும், மருத்துவ அணிச் செயலாளராக திருப்பாலைக்குடி முஹைதீன் அவர்களும் தொண்டரணிச் செயலாளராக சித்தார்கோட்டை காதர் ரிஸ்வான் அவர்களும் வர்த்தகர் அணிச் செயலாளராக காதிரியா முஸ்தபா அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இறைவன் துணைகொண்டு பொதுக்குழு மிகச் சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

 


 

 

        Email Us        |     FeedBack           |    Introduce To Friends    |   Advertisements   |   Tntj.net - 2005