இராமநாதபுரம் மாவட்ட கிளைகளில் நடைபெற்ற இஸ்லாமிய தெருமுனைப் பிரச்சாரங்கள்!

  மார்க்க விளக்க கூட்டம் மற்றும் உள்ளரங்கு நிகழ்ச்சிகள்!
  புகைப்படங்களுடன் செய்தி.
 




புதுவலசை

புதுவலசையில் 23-2-2008 அன்று மாலை சுமார் 6.45 மணிக்குக்கு மவ்ளவி முஹம்மது தமீம் M.I.Sc அவர்களைக் கொண்டு இஸ்லாத்தில் நுழைந்துவிட்ட புதிய வணக்கங்கள் என்ற தலைப்பில் தெருமுனைக் கூட்டம் ஊரின் மையப்பகுதியில் நடைபெற்றது. புதுவலசையில் உள்ள அரபியப்பா கந்தூரி விழா நடைபெற இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தர்ஹா வழிபாடுகளையும் அங்கு ஓதப்படும் பாமாலைகளையும் குர்ஆன் நபிவழி ஆதாரத்துடன் மிகச் சிறப்பாக எடுத்துரைக்கப்பட்டது. கிளை நிர்வாகிகள் அனைவரும் பெருமுயற்சி செய்து ஜமாஅத் அனுமதியுடன் நிகழ்ச்சியினை நடத்தினார்கள். இதில் ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர். மேலும் ஊரின் மையப்பகுதியில் நடைபெற்றதால் சுற்றி உள்ள வீட்டினர் அனைவரும் வீட்டை விட்டு வெளியில் வந்திருந்து கேட்டு பயனடைந்தனர். இதில் மாவட்ட தலைவர் மற்றும் கிளை நிர்வாகிள் அனைவரும் முன்னிலை வகித்தனர்.




சிக்கல்

சிக்கலில் முதன் முறையாக மவ்ளவி முஹம்மது தமீம் M.I.Sc அவர்கள் ஈமானில் உறுதி வேண்டும் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இந்த உள்அரங்கு நிகழ்வில் இளைஞர்கள் அதிகம் ஆர்வமாக கலந்து கொண்டனர். கிளை நிர்வாகிகளது விட முயற்சியால் இந்த நிகழ்வு பெரும் சிரமங்களுக்கு இடையில் நடைபெற்றது.


சித்தார்க்கோட்டை

இராமநாதபுரம் மாவட்டம் சித்தார்கோட்டை 24-2-2008 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளையின் சார்பாக சித்தார்கோட்டை ஜமாஅத் மதரஸா கட்டிடத்தில் கீழக்கரை ஆலிமா யாஸ்மீன் அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதில் நூற்றிற்கும் அதிகமான சகோதரிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். நீண்ட இடைவெளிக்குப் பின் நடைபெற்ற நிகழ்ச்சியாதலால் சகோதரிகள் மிகவும் ஆர்வமாக கலந்து கொண்டனர். சகோதரிகளின் வேண்டு கோளுக்கிணங்க இன்ஷா அல்லாஹ் இனிவரக்கூடிய காலங்களில் மாதம் இருமுறை பெண்கள் சொற்பொழுவு நிகழ்ச்சி நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது. நிகழ்ச்சியை கிளை தலைவர் சகோ. காதர் ரிஸ்வான், மற்றும் முஹம்மது கலீல், இஸ்மத் அலி, முஹம்மது கனி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.


பணைக்குளம்.

பனைக்குளம் பெரிய பேருந்து நிலையத்தில் 24-2-2008 மாலை சுமர் 6.50 மணியில் இருந்து 8.00 மணிவரை மவ்ளவி ரிபாய் ரஷ்ஷாதி அவர்களைக்கொண்டு எது நபிவழி என்ற தலைப்பில் தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. யார் சுன்னத்வல் ஜமாஅத்திற்கு சொந்தக்காரர்கள், இறைவனும் இறைத்தூதரும் கூறுவது என்ன?, இதற்கு மாற்றமாக சுன்னத் வல் ஜமாஅத் என்ற பெயரை வைத்துக் கொண்டு செய்யும் அட்டூழியங்ள் எவை? என்பதை பட்டியலிட்டு விளக்கினார்கள். பனைக்குளத்தில் மாணவர்களை வழிகெடுக்கும் பொய் சூபிகளைப்பற்றியும் விளக்கிக் கூறினார்கள். இதில் அதிகம் ஆண்களும், பேருந்து நிலையமாதலால் அங்கும் இங்குமாக நின்று அதிகமானவர்கள் கேட்டு பயனடைந்தனர். அத்தியூத்து, புதுவலசை மக்களும் கலந்து பயனடைந்தனர். நிகழ்ச்சியினை கிளை செயளாலர் சகோ. அஸ்வர்தீன் அவர்கள் மிகச் சிறப்பாக பெரும் முயற்சி செய்து ஏற்பாடுகள் செய்திருந்தார்கள். மாவட்ட தலைவர் மற்றும் கிளை நிர்வாகிகள் துபை ஜமாஅத்தைச் சேர்ந்த சகோ. ஹஸன், சேக்தாவூத் மற்றும் சுல்தான், இப்ராம்ஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.




வேதாளை

இராமநாதபுரம் மாவட்டம் வேதாளையில் 24-2-2008 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளையின் சார்பாக வேதாளை பேருந்து நிலையத்தில் மவ்ளவி ரிபாய் ரஷ்ஷாதி அவர்கள் மறுமையின் சிந்தனை என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள். பொதுமக்கள் போக்குவரத்து அதிகம் உள்ள இடமாதலால் அங்கும் இங்குமாக நின்று அதிகமானவர்கள் கேட்டு பயனடைந்தனர்.; வேதாளை சகோதரர்களுடன், புதுமடம், மரைக்காயர்பட்டிணம், இராமநாதபுரம் சகோதரர்களும் கலந்து கொண்டனர். பெண்கள் வீட்டில் இருந்தபடியே ஒலிபெருக்கி மூலம் கேட்டனர். இறுதியாக கிளை தலைவர் அஹமது கபீர் அவர்கள், ரஷ்ஷாதி அவர்களின் உரையில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டு பரிசோதித்தார்கள். இதில் வென்றவர்களுக்கு பரிசுகளும், கேள்வி பதில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு அனைவருக்கும் ஆறுதல்பரிசாக மார்க்க புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டார்கள். நிகழ்ச்சியை கிளை தலைவர் கபீர் பாயுடன் மற்ற நிர்வாகிகளும் சிறப்பாகச் செய்திருந்தனர்.
 

நரிப்பையூர்

 

மாலை சுமார் 7.00 மணிக்கு இராமநாதபுரம் மாவட்டம் நரிப்பையூர் நடுத்தெரு பள்ளிவாசல் முன் மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம் மாவட்ட செயலாளர் சகோ. ஆரிப்கான் தலைமையில் நடைபெற்றது. மாநில பேச்சாளர் சகோ. அப்துர் ரஹ்மான் பிர்த்வ்சி அவர்கள் சிர்க் பித்அத் ஓர் ஆய்வு என்ற தலைப்பில் தற்பொழுது நம்மிடம் நுழைந்துள்ள அனைத்து வகையான புதிய வணக்கங்களை தனக்கே உரிய பாணியில் விளக்கிக் கூறினார்கள். பின் கீழை ஆலிமா யாஸ்மீன் அவர்கள் முஸ்லிம்களின் திருமணம் இன்றும் அன்றும் என்ற தலைப்பில் அன்றைய சஹாபியப் பெண்மணிகளின் திருமணம் எங்கனம் இருந்தது இன்று நம்முடைய திருமணம் எவ்வாறு நடைபெறுகின்றது என்பதை ஒப்பிட்டு விளக்கிக் கூறி வரதட்சனையின் கொடுமையை வன்மையாகக் கண்டித்து உரையாற்றினார்கள். இறுதியில் கிளை தலைவர் சகோ. ஹூமாயூன் கபீர் அவர்கள் நன்றியுரைக்குப் பின் கூட்டம் இனிதே நிறைவுற்றது. இதில் சுமார் 500க்கும் அதிகமான பெண்கள் கலந்து கொண்டது இக்கூட்டத்தின் சிறப்பு அம்சமாகும்.

        Email Us        |     FeedBack           |    Introduce To Friends    |   Advertisements   |   Tntj.net - 2005