இராநமாதபுரத்தில் நடைபெற்ற மாணவர்களுக்கான கருத்தரங்கு நிகழ்ச்சி!

  மாநிலச் செயலாளர் முனீர் பங்கேற்பு

  புகைப்படங்களுடன் செங்தி...
 

இராமநாதபுரம் மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட தலைமையகத்தில் மாணவர்களுக்கான கருத்தரங்கம் மாவட்ட தலைவர் எம். அப்துல் ஹமீது தலைமையில் நடைபெற்றது.

 

இதில் சிறப்பு விருந்தினர்களாக மாநில செயளாலர் சகோ. முனீர் M Sc. சகோ. அப்துல் ஹக்கீம் B E. மற்றும் மதுரையைத் தலைமையாகக் கொண்ட மாணவர் அணியின் பொருப்பாளார் சகோ. முஹம்மது இல்யாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

 

சமுதாயத்தில் மாணவர்களின் பங்கு என்ன? உலக சரித்திரத்தில் இதுவரை மாணவர்களால் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன? மாணவர்களை எங்கனம் ஒருங்கிணைப்பது? மாணவர்களை வழி கெடுக்கும் இயக்கங்களில் இருந்து வென்றெடுப்பது என்பன போன்றவைகளை மாநில செயளாலர் முனீர் அவர்களும் சகோ. அப்துல் ஹக்கீம் அவர்களும் சிறப்பாக கடந்த கால சான்றுகளுடன் எடுத்துரைத்தார்கள். பின் மாணவர்களுடைய கேள்வி பதில் நிகழ்ச்சியில் அவர்களது அனைத்து விதமான ஐயங்களுக்கும் விளக்கமளித்து, இனிவரக்கூடிய காலங்களில் மாணவர்களை ஒருங்கிணைப்பது எப்படி என்பதை விளக்கிக் கூறியபின், மாணவர்களின் கல்வித்தரத்திற்கு ஏற்ப எங்கனம் உயர்கல்வி கற்பது, தற்காலத்திற்கு எவ்வித கல்வி கற்றால் முன்னேற்ற மடைய முடியும் என்பன போன்றவைகளை விளக்கிக் கூறியபின் நிகழ்ச்சி நிறைவுற்றது.

 

 

மேலும் கல்வி வேலை வாய்ப்பிற்கென்று தனியாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் வெப்சைட் தொடங்க வேண்டும் என்பதையும் மாணவர்களால் வலியுறுத்திக் கூறப்பட்டது. இதில் மாவட்ட செயளாலர் ஆரிப்கான், மாவட்ட மாணவர் அணி பொருப்பாளர் சகோ. இம்ரான், மாவட்ட துணைச் செயலாளர் சகோ. மாஹீன் ஆகியோர் நிழக்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர். பல கல்விக்கூடங்கள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றாலும் அதிகமான மாணவர்கள் பல கிளைகளில் இருந்து கலந்து பயனடைந்தனர்.

        Email Us        |     FeedBack           |    Introduce To Friends    |   Advertisements   |   Tntj.net - 2005