10, 12 ஆம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கான பயிற்சி முகாம்!

  ராம்நாட் சித்தார்க் கோட்டையில் நடைபெற்றது!

  புகைப்படங்களுடன் செய்தி...
 

 

இராமநாதபுரம் மாவட்டம் சித்தார்கோட்டை 9-2-2008 முஹம்மதியா மேல்நிலைப்பள்ளியில் 10, 12 ஆம் வகுப்புப் படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு உங்களால் வெல்ல முடியும் என்ற தலைப்பில் பயிற்சி முகாம் பள்ளி தாளாலர் அஹமது கபீர் தலைமையில் நடைபெற்றது.

 

அரசு இறுதித் தேர்விற்கு சுமார் ஒன்றரை மாதகாலமே உள்ள நிலையில், மாணவர்கள் தங்களை எங்கனம் தயார் செய்து கொள்ள வேண்டும், அதிக மதிப்பெண்கள் பெறுவது எவ்வாறு என்பதுடன் மாணவர்களிடம் இருக்க வேண்டிய தன்நம்பிக்கை போன்றவைகளை மனோதத்துவ பேராசிரியர் அஸரப் அலி அவர்கள் சிறப்பாக எளிதில் மாணவர்கள் புரிந்து கொள்ளக் கூடிய முறையில் விளக்கிக் கூறி, இதுவரை குறைந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை ஆர்வமூட்டி ஊக்ப்படுத்தி கரும் பலகையில் விளக்கிக் கூறி பயிற்சி கொடுத்தார்கள்.

 

 

இந்நிகழ்ச்சியை தலைமை ஆசிரியர் முஹம்மது இப்ராம்ஷா அவர்கள் தொகுத்து வழங்கினார்கள். மாவட்ட தலைவர் எம். அப்துல் ஹமீது, பள்ளியின் செயலாளர் முஹம்மது முஸ்தபா ஆகியோர் முன்நிலையில், சித்தார்கோட்டை தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கிளையினரால் பள்ளி வளாகத்தில் நடத்தப்பட்டது. இதில் சுமார் 100க்கும் அதிகமான மாணவ மாணவியற் கலந்து பயன் பெற்றனர். நிகழ்ச்சியை கிளை தலைவர் காதர் ரிஸ்வான், செயளாலர் முஹம்மது கலீல், இஸ்மத் அலி, எஹ்யாகான், அப்துல் ரஷீது ஆகியோர் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

        Email Us        |     FeedBack           |    Introduce To Friends    |   Advertisements   |   Tntj.net - 2005