பிளஸ் டு மாணவர்களுக்கு தேர்வில் அதிக மதிபெண் எடுக்க சிறப்பு பயிற்சி!

  நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்பு.

  தொண்டி நகர கிளை ஏற்பாடு.
  புகைப்படங்களுடன் செய்தி..
 

 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி நகர் கிளையின் சார்பாக கடந்த 17.02.08(ஞாயிறு) அன்று ப்ளஸ் 2 மாணவ மாணவிகளுக்கு அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்து வெற்றி பெறுவதற்கு 'வழிகாட்டுதல் பயிற்சி முகாம்' காலை 10.00 மணிமுதல் மதியம் 2.00 மணிவரை நடைபெற்றது. 

 

 

இதில் செய்யது முஹம்மது அரசு மேல் நிலைப்பள்ளி, அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மற்றும் I.M.M.S மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிள்ளுள்ள 102 மாணவ,மாணவிகள் பங்கு பெற்று பயனடைந்தார்கள். I.M.M.S மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் துணை ஆசிரியர்களும், அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியையும் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினார்கள் .மேலும் இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக சென்னை திறந்த நிலை பல்கலைகழகத்தின் துணை பேராசிரியர் முபாரக் அவர்கள் மேற்படிப்பு மற்றும் வேலைவாய்ப்பு பற்றி ஆலோசனை வழங்கினார்கள்.

 

        Email Us        |     FeedBack           |    Introduce To Friends    |   Advertisements   |   Tntj.net - 2005