சிருநீரகம் பாதிக்கப்பட்ட இரண்டு நபர்களுக்கு தலா ரூ 5000 மருத்துவ உதவி!

  சவுதி அல்ஜுபைல் கிளை TNTJ வழங்கியது!
  புதுக்கோட்டை மற்றும் தஞ்சை வடக்கு மாவட்ட நிர்வாகிகள், தொகையை உரியவர்களிடம் ஒப்படைத்தனர்!
  புகைப்படங்களுடன் செய்தி..
 

 

 

தஞ்சை வடக்கு மாவட்டம் குடந்தை நகர எல்லைக்கு உட்பட்ட செட்டிமண்டபத்தில் வசிக்கும் தாஹிராபானு என்பவருக்கு இரண்டு சிருநீரகங்களும் பாதிக்கபட்டு அதன் முழுமையான செயலை இழந்ததால், சிருநீரக மாற்று சிகிச்சை செய்ய உதவிக்கேட்டு உணர்வு பத்திரிக்கையில் வந்த விளம்பரத்தை பார்த்து சவுதி அரேபியா R/C 14 கிளை ஜுபேல்லில் பணிபுரியும் TNTJ கொள்கை சகோதரர்கள் ரூ 5000 (ஐந்து ஆயிரம்)  உதவித்தொகையாக அனுப்பியிருந்தனர். இதை தாஹிராபானு அவர்களின் கணவர் ரஸ்வி அவர்கள் 15-03-08 அன்று பணத்தை பெற்றுக்கொண்டார். இதில் மாவட்ட மற்றும் குடந்தை நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


 

இவருக்கு மாற்று சிருநீரகம் பொருத்த ஏழு லட்சங்கள் வரை தேவை என்பதும் அதுவரை இவரின் தினசரி மருத்துவ செலவு ரூ 650   என்பதும் இவரின் கணவர் மாத வருமானம் மிகமிக குறைவு என்பதும் குறிப்பிட தக்கது. மேலும் உதவி செய்ய விரும்புவோர் கீழ்கண்ட தொலைபேசி அனுகவும்.


ஷாஜகான் (மாவட்ட தலைவர்) – 9952528471
ஜாபர் (மாவட்ட செயலாளர்) - 9894123898

 

மேலும் புதுக்கோட்டையைச் சேர்ந்த அப்துல் வாஹித் என்ற சகோதரர் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு டயாலிஸிஸ் செய்து வருகிறார் அவருக்கு உதவிடுங்கள் என்ற செய்தி உணர்வில் வெளியானதை பார்த்த சவுதி அல்ஜுபைல் TNTJ பாதிக்கப்பட்ட சகோதருக்கு ரூ 5000  மருத்துவ உதவி செய்தது. இந்த தொகை புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டு அவர்கள் மூலம் உரியவரிடம் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
 

        Email Us        |     FeedBack           |    Introduce To Friends    |   Advertisements   |   Tntj.net - 2005