ரியாத் மண்டல கிளைகளில் நடைபெறும் இஸ்லாமிய நகழ்ச்சிகள்

  புகைப்படங்களுடன் செய்தி...
 

 

 ரப்வா கிளை:

01-02-2008 வெள்ளிக்கிழமையன்று ரப்வா பகுதியின் புதிய கிளையான ரப்வா கிளை 2-ல் மார்க்க விளக்க கூட்டம் நடைபெற்றது.அதில் மௌலவி இக்பால் அவர்கள் உரையாற்றினார். ஜூம்மா தொழுகைக்கு முன்பு நடைபெற்ற இந்த நிகழ்சியில் பலர் கலந்து கொண்டனர்.

 



ஷிஃபா கிளை:

அன்றையதினம் ஷிஃபா கிளையில் மௌலவி எம்.ஏ.ஹஃபீல் ஸலஃபி அவர்கள் 'அல்குர்ஆனும் நவீன அறிவியலும்' என்ற தலைப்பில் உரையாற்றினார். அவரை தொடர்ந்து ஷிஃபா கிளை செயலாளரான சகோ.அப்துல் குத்தூஸ் அவர்கள் சிற்றுரையாற்றினார். ஜூம்மா தொழுகைக்கு பின் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நியூ செனையா கிளை:

05-02-2008 செவ்வாய்கிழமையன்று இஷா தொழுகைக்கு பின் நியூ செனையா கிளையில் மௌலவி பஷீர் தாவதி அவர்கள் சிறப்பு சொற்பொழிவு நிகழ்த்தினார்.அதில் மே 10,11-ல் தஞ்சையில் நடைபெற இருக்கும் தவ்ஹீத் எழுச்சி மாநாட்டின் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.


ரவ்தா கிளை:

08-02-2008 வெள்ளிக்கிழமையன்று ரியாத் மண்டலத்திற்குட்பட்ட ரவ்தா கிளையில் மார்க்க விளக்க கூட்டம் நடைபெற்றது.அதில் ரியாத் மண்டல பேச்சாளர் அதிரை ஃபாரூக் அவர்கள் 'வாழ தகுந்த கோள் பூமி மட்டுமே!' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். குர்ஆனிலிருந்து ஆதாரத்தை எடுத்துக்காட்டி, வேறு எந்த கிரகங்களிலும் மனிதர்கள் வாழ்வதற்கேற்ற சூழ்நிலைகள் இல்லை என்பதை இன்றைய விஞ்ஞானம் மெய்ப்பித்துக்கொண்டிருப்பதை விளக்கி கூறினார்.அடுத்ததாக பயிற்சி பேச்சாளராக சகோ.அப்துல் ஹக் அவர்கள் 'இஸ்லாமும் விஞ்ஞானமும்' என்ற தலைப்பில் உரையாற்றினார். இன்றைக்கு விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பதெல்லாம் விஞ்ஞானவளர்ச்சி இல்லாத 1400 வருடங்களுக்கு முன்பே குர்ஆனிலும் ஹதீஸிலும் கூறப்பட்டிருக்கிறது என்பதை அவர் விளக்கிய விதம் அருமையாக இருந்தது.ஜூம்மா தொழுகைக்கு பின் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 



நியூ செனையா கிளை:

14-02-2008 வியாழனன்று நியூ செனையா கிளையில் மார்க்க விளக்க கூட்டம் நடைபெற்றது. ரியாத் மண்டல பேச்சாளர் சகோ.அதிரை ஃபாரூக் அவர்கள் 'இறைவனை முறைப்படி அஞ்சுவோம்' என்ற தலைப்பில் உரையாற்றினார்;. இஷா தொழுகைக்கு பின் நடைபெற்ற இந்த நிகழ்சியில் பலர் கலந்து கொண்டனர்.



அஸீஸியா கிளை:

15-02-2008 வெள்ளிக்கிழமையன்று அஸீஸியா கிளையில் மார்க்க விளக்க கூட்டம் நடைபெற்றது. சகோ.அப்துல் ஹக் அவர்கள் சிறப்புரையாற்றினார். பயிற்சி பேச்சாளராக சகோ.எஸ்.எம்.சாதிக் அவர்கள் 'பகரா சூராவின் பெயர்க்காரணம்' என்ற தலைப்பில் பகரா சூராவை விளக்கி அதிலிருந்து நாம் பெறும் படிப்பினை என்ன என்பதையும் எடுத்துக்கூறினார். இந்த கூட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

 

        Email Us        |     FeedBack           |    Introduce To Friends    |   Advertisements   |   Tntj.net - 2005