ரியாத் TNTJ கிளைகளில் நடைபெறும் மாதாந்திர மார்க்க விளக்க கூட்டங்கள்.

  புகைப்படங்களுடன் செய்தி...

 

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் ரியாத் மண்டலத்தில் மார்க்க பணி செய்வதற்காக கிளைகள் மூலம் மாதந்தோறும் மார்க்க விளக்கக்கூட்டங்கள், தர்பியா முகாம் போன்றவை தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கின்றன.

சுவாதி கிளை:

25-01-08 வெள்ளிக்கிழமையன்று ஜூம்மா தொழுகைக்கு முன் சுவைதி கிளையில் தர்பியா முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ரியாத் மண்டல பேச்சாளர்; அப்துல்லாஹ் மௌலவி அவர்கள் தர்பியா நிகழ்சியை நடத்தினார். தொழுகையின் முக்கியத்துவத்தை உணர்த்தி, அந்த தொழுகைக்கு மிகமுக்கிய தேவையான 'ஒலூ' எப்படி செய்யவேண்டும் என்பதை வந்திருந்தவர்களுக்கு தெளிவாக விளக்கி கூறினார்.'ஒலூ' விஷயத்தில் முஸ்லிம்கள் கவனக்குறைவாக இருப்பதை சுட்டிக்காட்டிய அவர் , 'நபி வழியில் நாம் எவ்வாறு ஒலூ செய்யவேண்டும்' என்பதையும் செய்முறையில் விளக்கி கூறினார். நிகழ்ச்சியில் பலர் பங்கு பெற்று பயனடைந்தனர்.ஒலூ சம்பந்தமான அவர்களின் கேள்விகளுக்கும் பதிலளிக்கப்பட்டது.
 

 


முர்ஸலாத் கிளை:

அன்றைய தினம் ஜூம்மா தொழுகைக்கு பின் முர்ஸலாத் கிளையில் மார்க்க விளக்க கூட்டம் நடைபெற்றது. முதலாவதாக, முர்ஸலாத் கிளை தலைவர் தொண்டி சிராஜ் அவர்கள் சிற்றுரையாற்றி நிகழ்சியை துவக்கி வைக்க, மௌலவி பஷீர் தாவதி அவர்கள் 'இன்றைய சூழலில் முஸ்லிம்கள் செய்யவேண்டியதென்ன?' என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவாற்றினார்.அப்போது அவர் முஸ்லிம்களின் நடவடிக்கைகள் எவ்வாறு இருக்கின்றன,அதை நல்லவிதமாக மாற்றிக்கொண்டால் இம்மைக்கும் மறுமைக்கும் அது பயனள்ளதாக அமையும் என்று குறிப்பிட்டார். தஞ்சையில் நடைபெற இருக்கும் தவ்ஹீத் மாநாட்டின் அவசியம் பற்றியும் அதில் நம்முடைய பணி எவ்வாறு இருக்கவேண்டும் என்றும் விளக்கி கூறினார். இந்நிகழ்சியில் முர்ஸலாத் பகுதி மக்கள் மற்றும் டி.என்.டி.ஜே-ன் பிற கிளை உறுப்பினர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



கதீம் செனையா:

31-01-08 வியாழக்கிழமையன்று இஷா தொழுகைக்கு பின் கதீம் செனையா டி.என்.டி.ஜே கிளையில் மார்க்க விளக்க கூட்டம் நடைபெற்றது. கிளை தலைவர் அப்துர் ரஹ்மான் நவ்லக் துவக்கவுரையாற்ற, மௌலவி எம்.ஏ.ஹஃபீழ் ஸலஃபி அவர்கள் 'அமானிதம் பேணுவோம்' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.நாம் செய்கின்ற பணியில் நாணயத்துடன் நடந்து கொள்ளவேண்டும்,நாம் செய்வது நமது வீட்டாருக்கோ நமது ஊராருக்கோ தெரியாது அதனால் எப்படியும் சம்பாதிக்கலாம் என்றநிலை ஒரு முஸ்லிமிடத்தில் வந்துவிடக் கூடாது.யாரும்பார்க்காவிட்டாலும் அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான் அவனிடத்திலிருந்து யாரும் எதையும் மறைக்க முடியாது என்ற எண்ணம் நம் ஒவ்வொருவரிடத்திலும் இருக்கவேண்டும் என்று இறைவேதத்தையும் இறுதி நபியின் இன்மொழிகளையும் சுட்டிக்காட்டி அச்சுறுத்தி எச்சரித்தார்.இறுதியாக ரியாத் மண்டல பொருளாளர் சகோ.ஃபைஸல் அவர்கள் ' தவ்ஹீத் மாநாடு ஏன்'என்ற தலைப்பில் சிற்றுரையாற்றினார். நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கு பெற்று பயனடைந்தனர்.

 

        Email Us        |     FeedBack           |    Introduce To Friends    |   Advertisements   |   Tntj.net - 2005