ரியாத் மண்டலத்தில் நடைபெற்ற கடந்த மாத செயல்பாடுகள்!

  கிளைகள் தோறும் மார்க்க விளக்கக் கூட்டங்கள்!
  ரியாத் மண்டல செயற்குழு
  தாயகத்திலிருந்து
தொலைபேசியில் தாயிகள் சொற்பொழிவு!
  இன்னும் பல..
  புகைப்படங்களுடன் செய்தி...

 


ஒலையா கிளை:


14.02.2008 அன்று ரியாத் மாநகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள அல்கொஸாமா கேம்ப் ஒயிட் ஹவுஸில் டி.என்.டி.ஜே-ன் ஒலையா கிளை கூட்டம் நடைபெற்றது. இலங்கை, இந்திய சகோதரர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் மவ்லவி எம்.ஏ. ஹஃபீழ் ஸலஃபி, ரியாதி அவர்கள் 'மாநபி வழிக்கு முரணான மத்ஹபுகள்' என்ற தலைப்பில் உரையாற்றினார்;. அவர் தனது உரையில் உலகின் பல நாடுகளில், மத்ஹபுகளின் தாக்கம் எவ்வாறு உள்ளது, அதனைப் பின்பற்றுபவர்களின் பரிதாப நிலை என்ன? என்பன போன்ற விஷயங்களை அல்குர்ஆன் ஹதீஸ் நிழலில் விளக்கினார்.


இலங்கையில் கிலாபத் கோஷமிடும் சில இயக்கங்கள் தமது பத்திரிக்கைகளில் மத்ஹபுகள் இஸ்லாமிய சட்டப் பாரம்பரியங்கள் என்று எழுதியவற்றை எடுத்துக் காண்பித்து, இந்த மத்ஹபு சட்டங்கள் குர்ஆனுக்கும் நபிவழிக்கும் நேரடியாக மோதுகின்ற மத்ஹபு வண்டவாளங்களை, மத்ஹபு நூல்களில் இருந்து பக்க எண்களுடன் எடுத்துக் கூறி, இவற்றை பகுத்தறிவுள்ள எவரும் சட்டப்பாரம்பரியம் என்று கூறத்துணிய மாட்டார்கள் என்பதை அவர் எளிமையாகவும் விரிவாகவும் விளக்கினார்;.


இக்கூட்டத்தில் 'தஞ்சை மாநாட்டின் அவசியம் என்ன?' என்ற தலைப்பில் சகோ.முஹம்மது மாஹீன் அவர்கள் உரையாற்றினார். அடுத்ததாக, ஒலைiயா கிளைத் தலைவர் சகோ. அபு முஹம்மது(நூருல் அமீன்) அவர்கள்; டி.என்.டி.ஜே நடத்தும் எல்லாக் கூட்டங்களிலும் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்வதுடன் மற்றவர்களையும் ஆர்வமூட்டி கலந்து கொள்ளச் செய்வது மிக அவசியம் என வலியுறுத்திப் பேசினார்.

 

 


இறுதியில், கலந்து கொண்ட சகோதரர்களில் பலர் 'இவ்வளவு மோசமான மத்ஹபு சட்டங்களையா கிலாபத் கோஷதாரிகள் சட்டப் பாரம்பரியம் என்கின்றனர்?!' என்று உண்மைகளை விளங்கியதோடு, மேலும் தெளிவு பெற சில கேள்விகளையும் கேட்டனர். அவர்களின் கேள்விகளுக்கு எம்.ஏ.ஹஃபீழ் ஸலஃபி,ரியாதி அவர்கள் தெளிவாகப் பதில் அளித்தார்கள்.

 

 


குடும்பங்கள கலந்து கொண்ட பயான்


21-02-2008 வியாழக்கிழமையன்று குடும்ப பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.அதில் ரியாத் மண்டல பேச்சாளர் சகோ.அதிரை ஃபாரூக் அவர்கள் 'மறுமை சிந்தனை' என்ற தலைப்பில் உரையாற்றினார்.தாயகத்திலிருந்து டி.என்.டி.ஜே-ன் மாநில பேச்சாளர் கோவை ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் தொலைபேசி வழியாக உரையாற்றினார்.இந்நிகழ்சியில் பெண்கள், குழந்தைகள் உட்பட ஏராளமானோர் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

 


கதீம் செனையா கிளை:


அன்றையதினம் இரவில் கதீம் செனையாவில் மார்க்கவிளக்க கூட்டம் நடைபெற்றது.பயிற்சி பேச்சாளராக சாதிக் அவர்கள் 'உளதூய்மை' என்ற தலைப்பில் பேசினார்.சகோ.அதிரை ஃபாரூக் அவர்கள் 'நல்லறங்களை லேசாக எண்ணிவிடக்கூடாது' என்ற தலைப்பில் உரையாற்றினார்.

 

 

தாயகத்திலிருந்து டி.என்.டி.ஜே-ன் மாநில பேச்சாளர் எம்.எஸ்.சுலைமான் அவர்கள் 'தமிழகத்தில் தவ்ஹீத் வந்த வரலாறு – ஓர் மீள்பார்வை' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.அப்போது அவர் தவ்ஹீத் மாநாடுகள் நாயகம் நபி (ஸல்) அவர்கள் காலம் தொட்டு நடைபெற்று வருவதை சுட்டிக்காட்டினார். ரியாத் மண்டல தலைவர் சகோ.முஹம்மது மீரான் அவர்கள் 'தவ்ஹீத் மாநாட்டின் அவசியம்'; குறித்து சிற்றுரையாற்றினார்.நிகழ்சியில் பலர் பங்கு பெற்றனர்.இந்நிகழ்சியில் கடும்குளிரையும் பொருட்படுத்தாமல் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


சுவைதி கிளை:


22-02-2008 வெள்ளிக்கிழமையன்று சுவைதி கிளையில் மார்க்க விளக்க கூட்டம் நடைபெற்றது. அதில் இக்பால் மௌலவி அவர்கள் 'திக்ரின் அவசியம்' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். பயிற்சி பேச்சாளராக சகோ.எஸ்.எம்.ஸாதிக் அவர்கள் 'தூய்மையான உள்ளம் வேண்டும்' என்ற தலைப்பில் உரையாற்றினார்.

 



நியூ செனையா கிளை:

நியூ செனையாவில் 22-02-2008 வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற கூட்டத்தில் தம்மாம் மண்டலத்திலிருந்து ரியாத் மண்டலத்திற்கு வந்திருக்கும் சகோ.கமால் அவர்கள் உரையாற்றினார். தாயகத்திலிருந்து டி.என்.டி.ஜே-ன் மாநில பேச்சாளர் சம்சுல்லுஹா ரஹ்மானி அவர்கள் தொலைபேசி வழியாக சிறப்புரை நிகழ்த்தினார்.ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.



அதை தொடர்ந்து நியூ செனையாவில் அடுத்த வாரமும் (28-02-2008,வியாழன்) மார்க்க விளக்;கக்கூட்டம் நடைபெற்றது. லெசார்டி கேம்பில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மௌலவி.எம்.ஏ.ஹஃபீழ் ஸலஃபி,ரியாதி அவர்கள் டென்மார்க்கில் மீண்டும் நாயகம் நபி(ஸல்) அவர்களை கார்ட்டூனாக வரைந்ததை கண்டித்து உரையாற்றினார். தாயகத்திலிருந்து டி.என்.டி.ஜே-ன் மாநில பேச்சாளர்  கோவை.ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் தொலைபேசி வாயிலாக தவ்ஹீத் மாநாடு பற்றி சிறப்புரையாற்றினார். நிகழ்சியின் இறுதியில் நடந்த கேள்வி-பதில் நிகழ்சியில் கேள்விகளுக்கு கோவை.ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் பதிலளித்தார்கள். இந்நிகழ்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

முர்ஸலாத் கிளை:

29-02-2008 வெள்ளிக்கிழமையன்று முர்ஸலாத் கிளையில் மார்க்க விளக்க கூட்டம் நடைபெற்றது.சகோ.அதிரை ஃபாரூக் அவர்கள் 'குர்ஆனின் கல்வியே உயர்ந்த கல்வி' என்ற தலைப்பில் உரையாற்றினார்.பயிற்சி பேச்சாளராக சகோ.எஸ்.எம்.ஸாதிக் அவர்கள் 'இஸ்லாத்தில் உறுதி' என்ற தலைப்பில் உரையாற்றினார். தாயகத்திலிருந்து டி.என்.டி.ஜே-ன் மாநில பேச்சாளர் பக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் 'தமிழகத்தில் தவ்ஹீத் மாநாடு' என்ற தலைப்பில் மாநாட்டின் அவசியத்தை உணர்த்தி சிறப்புரையாற்றினார்.இந்த கூட்டத்தில் ஏராளமானோர் பங்கு பெற்று பயன்பெற்றனர்.

 



ரியாத் மண்டல செயற்குழு

07-02-2008 வியாழக்கிழமையன்று பத்ஹா சென்டரில் ரியாத் மண்டல செயற்குழு நடைபெற்றது.


அதில் கிளைகள் மூலமாக எவ்வாறு பணிகளை மேம்படுத்துவது, மீடியாக்களை நாம் எப்படி பயன்படுத்துவது போன்ற பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டது.ஆனாலும் தஞ்சையில் நடைபெற இருக்கும் தவ்ஹீத் எழுச்சி மாநாட்டிற்கான சிறப்பு செயற்குழுவாகவே அது இருந்தது. ஏராளமான நிர்வாகிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களுடைய ஆலோசனைகளை தெரிவித்தனர்.

 

இறுதியாக மாநாட்டிற்கான பொருளாதார உதவிக்காக, கிளைகள் வாயிலாக சகோதரர்களை சந்திப்பதற்காக தனித்தனி குழுக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. நான்குபேருக்குமேல் பங்குபெறும் அந்த குழு எவ்வாறு செயல்படவேண்டும் என்றும் விவாதிக்கப்பட்டது. இரவு 9:30 மணிக்கு துவங்கிய செயற்குழு, நிர்வாகிகளின் ஆர்வமிகுதியால் நேரம்போவதுகூட தெரியாமல் இரவு 12 மணி வரை தொடர்ந்தது.




1.மிக முக்கியத்துவம் வாய்ந்த தவ்ஹீத் எழுச்சி மாநாட்டில் நாம் அனைவருமே கலந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.

2.மே மாதத்திற்கு முன்னரே ஊருக்கு செல்ல இருப்பவர்கள் மற்றும் மே மாதத்திற்கு பின்னால் செல்ல இருப்பவர்கள் மே மாதம் ஊரில் இருப்பதுபோல் தங்கள் பயணத்தை மாற்றியமைத்து கொள்ள வேண்டும்.

3.ஊரிலிருக்கும் நம்முடைய உறவினர்கள்,நண்பர்கள் அனைவருக்கும் போண் மூலமாகவோ கடிதம் மூலமாவோ தொடர்பு கொண்டு இந்த மாநாட்டின் முக்கியத்துவத்தை உணர்த்தி, அவர்களனைவரையும் அதில் பங்கெடுக்க சொல்லவேண்டும்.

4.நாமும் பொருளாதார உதவி செய்து மற்றவர்களிடமும் உதவி கேட்க வேண்டும்.
என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


இறுதியாக இந்த மாநாடு வெற்றிபெறவும், ஏகத்துவத்தை ஏற்றவர்கள் அதில் உறுதியாக இருக்கவும், மற்றவர்கள் ஏகத்துவத்தை விளங்கி மறுமை வெற்றியடையவும், மாற்றுமத நண்பர்கள் இஸ்லாத்தை புரிந்து கொள்ளவும் இந்த மாநாடு ஒரு படிக்கல்லாக அமையவேண்டுமென்று நாம் ஒவ்வொருவரும் இறைவனிடம் மன்றாடி துஆ கேக வேண்டுமென்ற சிறப்பு வேண்டுகோளுடன் செயற்குழு இனிதே நிறைவுபெற்றது.
 

        Email Us        |     FeedBack           |    Introduce To Friends    |   Advertisements   |   Tntj.net - 2005