ரியாத் TNTJ கிளைகளில் மார்ச் மாதம் நடைபெற்ற இஸ்லாமிய நிகழ்ச்சிகள்!

  தாயகத்திலிருந்து தொலைபேசியில் தாயிகள் சிறப்புரை!
  வெள்ளிமேடை தொலைபேசி வாயிலாக நேரடி ஒளிபரப்பு
 
இன்னும் பல்வேறு நிகழ்ச்சிகள்...
 
புகைப்படங்களுடன் செய்தி...

 


15-03-08 அன்று நியூ செனையா 'நேஷனல் பிரிண்டிங் பிரஸ்' கிளையில் பணி புரியும் சகோதரர்களுக்காக நடைபெற்ற மார்க்க விளக்க நிகழ்ச்சியில் சகோ: அப்துல்லாஹ் மௌலவி அவர்கள் – தியாகத்தில் வளர்ந்த ஏகத்துவம்'' எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள். அவருடைய உரைக்கடுத்து தலைமையிலிருந்து மாநிலப் பேச்சாளர் சகோ: அப்துந் நாசர் M.I.Sc அவர்கள் மாநாடு குறித்து சிறப்புரையாற்றினார்கள். அதில் ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டனர்.


20-03-08 அன்று ரியாத் மண்டல பொருளாளர் சகோ: ஃபைசல் ( & அமீருதீன் ) அவர்களது இல்லத்தில் குடும்பத்தினருக்காக மார்க்க விளக்க நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் ஆண்களுக்கு தனி அரங்கமும், பெண்களுக்கு தனி அரங்கமும் அமைக்கப்பட்டிருந்தது. அதில் சகோ: மௌலவி எம்.ஏ.ஹஃபிழ் ஸலஃபி அவர்கள் '' மரண சிந்தனை '' எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள் , அவருடைய உரைக்கடுத்து தாயகத்திலிருந்து மாநிலப் பேச்சாளர் எம்.எஸ்.சுலைமான் அவர்கள் '' முன்மாதிரி பெண்மணிகள் '' எனும் தலைப்பில் தொலைபேசி வழியாக சிறப்புரையாற்றினார்கள் இதில் ஏராளமான குடும்பத்தினர்கள் கலந்து கொண்டனர்.


21-03-08 அன்று ரப்வா கிளையில் காலை 10 மணி அளவில் சகோ: அப்துல்லாஹ் மௌலவி அவர்கள் '' ஏகத்துவம் '' எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள். அவருடைய உரைக்கடுத்து தாயகத்திலிருந்து வெள்ளி மேடை சொற்பொழிவு தொலைபேசி வாயிலாக 'லைவ்' செய்யப்பட்டது. காலை நேரத்திலும் ஆர்வத்துடன் ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டனர்.



21-03-08 அன்று ரியாத் தலைமை மர்கஸில் வாரந்தோறும் நடைபெறும் பேச்சுப் பயிற்சி, மற்றும் விணாடி – வினா நிகழ்ச்சியில் இறுதி உரையாக சகோ: அப்துல்லாஹ் மௌலவி அவர்கள் '' புதிய பேச்சாளர்களுக்கான அறிவுரைகள் '' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தி நிகழ்ச்சியை முடித்து வைத்தார்கள். ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டதால் மர்கஸில் இடம் நிரம்பி வழிந்தது.


21-03-08 அன்று அஸீஸியா கிளையில் சகோ: அதிரை ஃபாரூக் அவர்கள் தொழுகையின் சிறப்பு என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள். அவருடைய உரைக்கடுத்து தாயகத்திலிருந்து மௌலவி அப்பாஸ் அலி M.I.Sc அவர்கள் '' தஞ்சை மாநாடு ஏன் '' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள் மாநாடு பற்றிய கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார்கள். ஆர்வத்துடன் ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டனர்.


21-03-08 அன்று நியூ செனையா '' GCC '' கம்பெணியில் பணிபுரியும் சகோதரர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மார்க்க விளக்க நிகழ்ச்சியில் சகோ: மௌலவி எம்.ஏ.ஹஃபிழ் ஸலஃபி அவர்கள் '' மாமனிதர் (ஸல்) அவர்களின் மனிதநேயம் '' எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள். அவர்களுடைய உரைக்கடுத்து தலைமையிலிருந்து சகோ: கோவை ரஹ்மத்துல்லாஹ் மௌலவி அவர்கள் மாநாடு சிறப்புக் குறித்து தொலைபேசி வாயிலாக சிறப்புரையாற்றினார்கள். ஆர்வத்துடன் ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டனர்.


22-03-08 அன்று இன்டர்காண்டினெண்டல் ஹோட்டலில் பணிபுரியும் தமிழக மற்றும் இலங்கை சகோதரர்களுக்காக மார்க்க விளக்க நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது அதில் சகோ: மௌலவி எம்.ஏ.ஹஃபிழ் ஸலஃபி அவர்கள் ''; துன்பத்தில் பொறுமை'' எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள் ஆர்வத்துடன் ஏராளமான தமிழக மற்றும் இலங்கை சகோதரர்கள் கலந்து கொண்டனர்.


26-03-08 அன்று 'சவுதி ஓஜர்' கிளை சகோதரர்களுக்காக மார்க்க விளக்க நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது அதில் சகோ: மௌலவி எம்.ஏ.ஹஃபிழ் ஸலஃபி அவர்கள் ''; நபிகளாரின் நற்குண பண்புகள் '' எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள். அதில் ஆர்வத்துடன் ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டனர்.

27-03-08 அன்று கதீம் செனையா அல் பாப்தய்ன் கம்பெனியில் பணிபுரியும் சகோதரர்களுக்காக மார்க்க விளக்க நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது அதில் சகோ: அப்துல்லாஹ் மௌலவி அவர்கள் ''; பெண்கள் விஷயத்தில் பயந்து கொள்ளுங்கள் '' எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள் அதில் ஆர்வத்துடன் ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டனர்.


27-03-08 அன்று ரியாத்திலிருந்து சுமார் 300 கிலே மீட்டர் தொலைவிலுள்ள 'லைலா அஃப்லாஜ்'எனும் ஊரில் சகோ: - அதிரை ஏ.எம். ஃபாரூக் அவர்கள் '' தொழுகையை விட்டவருடைய மறுமை நிலை '' எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். அதற்கடுத்து ஏகத்துவ எழு;ச்சி மாநாட்டின் அவசியம் குறித்து '' தஞ்சை மாநாடு ஏன் ?'' என்ற தலைப்பில் ரியாத் மணடல பொருளானர் சகோ: ஃபைசல் அவர்கள் சிறப்புரையாற்றினார்;. பிறகு மார்க்க மற்றும் அமைப்பு ரீதியான கேளிவிகளுக்கு பதிலளித்தார். பணி நிமித்தம் காரணமாக நள்ளிரவு சுமார் 12 மணியளவில் தொடங்கிய நிகழ்சிசி பின்னேரம் 1 மணியைத் தாண்டியப் பிறகும் ஏராளமான சகோதரர்கள் அமைதியாக இருந்து நிகழ்ச்சிக்கு ஒத்துழைப்பு நல்கினார்கள்.


27-03-2008 அன்று ரியாத் தலைமை மர்கஸில் வாரந்தோறும் நடைபெறும் பேச்சுப் பயிற்சி, மற்றும் விணாடி – வினா நிகழ்ச்சியில் இறுதி உரையாக சகோ: அதிரை ஏ.எம்.பாரூக் அவர்கள் '' சிந்திக்கக் கூறும் திருமறை '' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தி நிகழ்ச்சியை முடித்து வைத்தார்கள். ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டதால் மர்கஸில் இடம் நிரம்பி வழிந்தது.


8-03-08 அன்று நியூ செனையா 'லாஸூர்டி' கோல்டு கம்பெனியில் பணிபரியும் சகோதரர்களுக்காக நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் சகோ: இக்பால் மௌலவி அவர்கள் '' நற்குணம் '' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள். அதில் ஆர்வத்துடன் ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டனர்.


28-03-08 அன்று சுவைதி கிளையில் காலை 10 மணி அளவில் நடைபெற்ற மாரக்க விளக்க நிகழ்ச்சியில் சகோ: அப்துல் ஹக் சிற்றுரையாற்றினார். அதைற்கடுத்து சகோ: எஸ்.எம். ஸாதிக் அவர்கள் '' ஈமானில் உறுதி '' எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள். காலை நேரத்திலும் ஆர்வத்துடன் ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டனர்.


28-03-08 அன்று முர்ஸலாத் கிளையில் சகோ: தொண்டி சிராஜ் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள். ஆர்வத்துடன் ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டனர்.


புகைப்படங்கள்...



 

        Email Us        |     FeedBack           |    Introduce To Friends    |   Advertisements   |   Tntj.net - 2005