ஷார்ஜாவில் நடைபெற்ற இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்!

  சகோதரர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு!
  புகைப்படங்களுடன் செய்தி...

 

கடந்த 03-04-08 வியாழன் மாலை ஷார்ஜா ஸனாயிய்யா என் சி இ கேம்ப் பள்ளிவாசலில் வைத்து இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை ஷார்ஜா ஜமாஅத்துத் தவ்ஹீதின் செயலாளர் சகோ. பர்மான் அலி துவக்கிவைத்து அறிமுகவுரை நிகழ்த்தினார். அமீரக ஜமாஅத்துத் தவ்ஹீதின் அழைப்பாளரான சகோ. முஹம்மது நாஸர் (இலங்கை) முன்னுரை நிகழ்த்தி வினவப்பட்ட கேள்ளிகளுக்கும் ஐயங்களுக்கும் பதிலளித்தார். மார்க்க சம்பந்தமான ஐயங்களிலிருந்து தெளிவு பெறுவதர்காக சகோதரர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு விளக்கம் பெற்றனர்.

 

 

பிரார்த்தனையுடன் நிகழ்ச்சி நிறைவுபெற்றது. புதிது புதிதாக சகோதரர்கள் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதால் மாதமொருமுறை இதுபோன்ற (கேள்வி பதில்) நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெறவேண்டும் என வந்திருந்தவர்கள் கருத்து தெரிவித்தனர். புதிய மற்றும் பழைய என் சி இ கேம்ப் சகோதரர்களான ரசூல் மைதீன், மொய்தீன் மற்றும் ஜவாது அஹ்மத் ஆகியோர் நிகழ்சிக்கான எல்லா ஏற்பாடுகளையும் மிக நன்றாக செய்திருந்தனர். அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்.

 

 

        Email Us        |     FeedBack           |    Introduce To Friends    |   Advertisements   |   Tntj.net - 2005