நிர்வாகிகளுக்கான சிறப்பு தர்பியா முகாம்.

 ஷார்ஜா TNTJ யின் புதிய நிர்வாகிளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது!
 புகைப்படங்களுடன் செய்தி..

ஷார்ஜாவில் கடந்த பிப்ரவரி மாதம் ஷார்ஜா ஜமாஅத்துத் தவ்ஹீதின் பொதுக்குழு கூட்டமும் புதிய நிர்வாகிகள் தேர்வும் அமீரக ததஜ ஒருங்கிணைப்பாளர் சகோ. ஹாமீன் இப்றாஹீம், துபை ஜமாஅத்துத் தவ்ஹீதின் தலைவர் சகோ. ஜமாலுத்தீன் புஹாரி மற்றும் அபுதாபி தவ்ஹீத் ஜமாஅத்தின் ஆலோசகர் சகோ. அஹ்மது கபீர் அவர்களது முன்னிலையில் நடைபெற்றது.

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகத்தில் நிர்வாக சீரமைப்பிற்குப் பின் ஜமாஅத்தை வழிநடத்த வேண்டிய பொறுப்பிலுள்ள நிர்வாகிகள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் நிர்வாகமும் அதன் நோக்கமும் நிர்வாகிகளின் பணிகளும் அதை செயல்படுத்த வேண்டிய முறைகளும் போன்ற பல அறிவுரைகள் அடங்கிய ஒரு தர்பிய்யா முகாம் கடந்த 07-03-07 வெள்ளிக்கிழமை மாலை ஷார்ஜா தவ்ஹீத் ஜமாஅத்தின் புதிய மர்கஸில் வைத்து நடைபெற்றது.



கலந்துரையாடல் முறையில் அமைக்கப்பட்டிருந்த இந்த முகாமை அமீரக ததஜ ஒருங்கிணைப்பாளர் சகோ. ஹாமீன் இப்றாஹீம் அவர்கள் வழிநடத்தினார். முகாமில் கலந்துகொண்ட ஷார்ஜா ஜமாஅத்துத் தவ்ஹீதின் புதிய நிர்வாகிகளுக்கு அந்த தர்பிய்யா முகாம் ஒரு புத்துணர்வை ஏற்படுத்தக்கூடியதாக அமைந்திருந்தது என்றால் அது மிகையகாது.

புதிய நிர்வாகிகள் :

தலைவர் : சகோ. ஷிஹாபுத்தீன் கோயா - தேங்காய்பட்டணம் (குமரி மாவட்டம்)
துணைத் தலைவர் : சகோ. முஹம்மது ஹனீபா - இருமேனி (ராமநாதபுரம் மாவட்டம்)
பொதுச் செயலாளர் : சகோ. ஹபீபுர்ரஹ்மான் - திட்டுவிளை (குமரி மாவட்டம்)
துணைப் பொதுச்செயலாளர்: சகோ. அப்துல் ஜப்பார் - வழுதூர் (ராமநாதபுரம் மாவட்டம்)
பொருளாளர் : சகோ. பஷீர் அஹ்மத் - நிரவி (காரைக்கால் மாவட்டம்)

செயலாளர்கள் : சகோ. அக்பர் - மும்பை
                                     : சகோ. முஹ்தாக் அஹ்மத் - ஆற்காடு
                                     : சகோ. ஜியாவுத்தீன் - திருவிடைச்சேரி
                                     : சகோ. இஸ்மாஈல் - புளியங்குடி
                                     : சகோ. இப்றாஹீம் - சாயல்குடி
                                     : சகோ. பர்மான் அலி - நாச்சிக்குளம்
                                     : சகோ. ஜாஹிர் உசேன் - நெல்லிக்குப்பம்

 

 


 

        Email Us        |     FeedBack           |    Introduce To Friends    |   Advertisements   |   Tntj.net - 2005