ஷார்ஜா ஸனாயிய்யாவில் மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம்.

  எஸ்.எம் பாக்கர் கோவை ஜாஃபர் உரை!

  கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் பல பகுதிகளிலிருந்து மக்கள் கூட்டம்!

  புகைப்படங்களுடன் செய்தி...

 


அல்லாஹ்வின் கிருபையால் 25-02-08 மாலை 9.30 முதல் 11.00 மணி வரை ஷார்ஜா ஸனாயிய்யாவில் ETA EMCO CAMP - ல்  TNTJ மாநிலப் பொதுச்செயலாளர் கலந்து கொண்ட ஒரு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

 

 

நிகழ்ச்சியை ஷார்ஜா ஜமாஅத்துத் தவ்ஹீதின் தலைவர் சகோ. ஷிஹாபுத்தீன் கோயா துவக்கிவைத்தார். தமிழ்நாடு தவ்ஹீதின் பணிகள் என்ற தலைப்பில் TNTJ மாநில செயலாளர் சகோ. கோவை ஜாஃபர் அவர்களும், தவ்ஹீதின் எழுச்சி என்ற தலைப்பில் சகோ. எஸ். எம். பாக்கர் அவர்களும் உரையாற்றினார்கள்.

 

 

கடும் குளிரையும் பொருட்படுத்தாது பல பகுதிகளிலிருந்தும் நூற்றுக்கணக்கான சகோதரர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். ஷார்ஜா ஜமாஅத்துத் தவ்ஹீதின் துணைப் பொதுச் செயலாளர் சகோ. அப்துல் ஜப்பார் அவர்கள் நன்றியுரை கூற துஆவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை ஸனாயிய்யா பகுதி செயலாளர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். அல்ஹம்து லில்லாஹ்.

        Email Us        |     FeedBack           |    Introduce To Friends    |   Advertisements   |   Tntj.net - 2005