ஷார்ஜாவில் நடைபெற்ற நாச்சிக்குளம் சகோதரர்கள் ஒருங்கிணைப்புக் கூட்டம்!

 புகைப்படங்களுடன் செய்தி..

மார்க்கப்பணிகளில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கையில் உறுதியுடைய சகோதரர்கள் அமீரகத்தின் பல பகுதிகளிலும் தொடர்பில்லாமல் இருப்பதால் அவர்களை ஒருங்கிணைத்து ஊர் மேம்பாட்டில் கவனம் செலுத்துவதர்காகவும் அமீரகத்தில் அமைந்திருக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தனித்தனி மண்டல தலைமையின் கீழ் செயல்படுவதர்காகவும் கடந்த 11-04-08 அன்று மாலை ஷார்ஜா ஜமாஅத்துத் தவ்ஹீத் மர்கஸில் ஷார்ஜா ஜமாஅத்துத் தவ்ஹீதின் தலைவர் சகோ. ஷிஹாபுத்தீன் கோயா (தேங்காய்பட்டணம்) மற்றும் ஷார்ஜா ஜமாஅத்துத் தவ்ஹீதின் செயலாளர் சகோ. ஃபர்மான் அலி (நாச்சிக்குளம்) ஆகியோர் முன்னிலையில் அமீரகம் வாழ் நாச்சிக்குளம் சகோதரர்களின் ஒருங்கிணைப்புக் கூட்டம் நடைபெற்றது.

 

 

நிர்வாகத்தின் அவசியமும் பண்புகளும் என்ற தலைப்பில் மவ்லவி இஸ்ஸுத்தீன் ரிள்வான் அவர்கள் சிற்றுரை வழங்கினார்கள். கூட்டத்தில் தலைவராக சகோ. எம். கெ. எஸ். முஹம்மது அவர்களும், துணைத் தலைவராக சகோ. எம். ஐ. ஸிராஜ் அவர்களும், செயலாளராக சகோ. கெ. எம். எ. அரசுத்தீன் அவர்களும், துணைச் செயலாளராக சகோ. எஸ். மும்தாஜ் அலி அவர்களும், பொருளாளராக சகோ. எஸ். முஹம்மது காமில் அவர்களும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

 

அல்லாஹ்வுக்கே எல்லா புகழும். கூட்டத்தில் மே மாநாடு உட்பட பல விசயங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேலதிக விபரங்களுக்கு அமீரக வாழ் நாச்சிக்குளம் சகோதரர்கள் சகோ. எம். கெ. எஸ். முஹம்மது அவர்களை 050 9386443 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.

 

 


 

        Email Us        |     FeedBack           |    Introduce To Friends    |   Advertisements   |   Tntj.net - 2005