காதலர் தின கொண்டாட்டத்தை கண்டித்து அபுதாபியில் நடைபெற்ற மார்க்க விளக்கக் கூட்டம்!

 நிகழ்ச்சியின் போது இஸ்லாத்தை தழுவிய மாற்றுமத சகோதரர்!
 புகைப்படங்களுடன் செய்தி...

 

அபுதாபி தவ்ஹீத் ஜமாஅத்தின் கிளையான முஸாபா பெங்காளி பள்ளியில் காதலர் தின கொண்டாட்டத்தை கண்டித்து 15 02.2008 வெள்ளிக்கிழமையன்று காதல் செய்வோம் என்ற தலைப்பில் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஒருங்கிணைப்பாளர் சகோதரர் ஹாமீன்இபுராஹீம் உரை நிகழ்த்தினார்கள்.

 

 மேலும் தூய இஸ்லாத்தை நம் சமுதாய மக்களிடம் எடுத்துச்சொல்லும் பணிகளுக்கிடையே பிற சமுதாய மக்களுக்கும் இந்த சத்திய இஸ்லாத்தை பல்வேறு வழிகளில் எடுத்துச்சொல்கிறோம். அதன் பலனாய் தமிழ்நாடு திருவாரூர் மாவட்டம் வன்டாம்பாளையத்தை சேர்ந்த சகோதரர் செந்தில் என்கிற சல்மான்பாஸில் இந்த சத்திய இஸ்லாத்தை விளங்கி தன்னுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார்.

 

 

நிகழ்ச்சியின் இறுதியில் சகோதரர் ஹாமின்இபுராஹீம் அந்த சகோதரருக்கு ஏகத்துவ உறுதிமொழியை சொல்லிக் கொடுத்தார்கள்.சகோதரர் சல்மானிடம் தூய இஸ்லாத்தை தாங்கள் ஏற்றுக்கொண்டீர்களே இதனால் உங்கள் குடும்பத்தினரின் எதிர்ப்புகளை சந்திக்கவேண்டி வருமே என்று கேட்டபோது அவர் சொன்ன பதில் எனக்கு கிடைத்த இந்த நேர்வழி எனது குடும்பத்தினருக்கும் கிடைக்க வேண்டும் என நான் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் என் கூறினார்.
 

        Email Us        |     FeedBack           |    Introduce To Friends    |   Advertisements   |   Tntj.net - 2005