அபுதாபியில் நடைபெற்ற சிறப்பு இஸ்லாமிய நிகழ்ச்சி!

 மாநிலப் பொதுச் செயலாளர் பாக்கர் மற்றும் செயலளார் ஜாஃபர் சிறப்புரை!
 புகைப்படங்களுடன் செய்தி...

 

கடந்த 21.02.2007 அன்று அபுதாபி தவ்ஹீத் ஜமாஅத் மர்க்கஸில் தாயகத்திலிருந்து வருகை தந்துள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில பொதுச்செயலாளர் சகோதரர் எஸ்.எம்.பாக்கர் மற்றும் மாநில செயலாளர் சகோரதர் கோவை ஜாபர் ஆகியோர் கலந்து கொண்ட இஸ்லாமிய சிறப்பு நிகழ்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது


 


நிகழ்ச்சியின் ஆரம்ப நேரத்திற்கு முன்னரே சகோதரர்கள் மாக்கஸ் ஹாலில் நிறைந்துவிட்டார்கள் இடப்பற்றாக்குறையினால் நிக்ழ்சியை தொலைகாட்சி வழியாக பார்ப்பதற்கு அருகிலுள்ள அறைகளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சிக்கு தவ்ஹீத் ஜமாஅத்தின் துணைத்தலைவர் ஷேக்முஹம்மது அவர்கள் தலைமை தாங்கினார்.



முதலில் சகோதரர் கோவை ஜாபர் அவர்கள் தமிழகத்தில் TNTJ செய்து வரும் அரும் பணிகள் குறித்து உரை நிகழ்த்தினர்கள்.



அதனை தொடர்ந்து மாநில பொதுச் செயலாளர் எஸ்.எம்.பாக்கர் அவர்கள் 'ஏகத்துவ எழுச்சி' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் அவர்களது உரையில் தமிழகத்தில் ஏகத்துவ வளர்ச்சியின்போது ஏற்பட்ட கடந்த கால நிகழ்வுகளை சொல்லி காண்பித்து அந்த வளர்ச்சியின் முதல்படிதான் இன்ஷாஅல்லாஹ் வர இருக்கின்ற மே 10,11, ஆகிய தேதிகளில்; தஞ்சை வல்லத்தில் நடக்க இருக்கும் ஏகத்துவ எழுச்சி மாநாடு என்று கூறி மாநட்டிற்கு அழைப்பு விடுத்தார்கள். பல இலட்ச்சம் முஸ்லீம்கள் கூடி களைகின்ற ஒரு இடமாக இல்லாமல் சகோதரத்துவத்தையும் இணைப்பையும் ஏற்படுத்த கூடிய ஓர் தளமாகவும் நாங்களும் கொள்கைவாதிகள்தான் என்று வெறும் வாய் வார்த்தைகளை மட்டும் கூறுவோரை போலில்லாமல் இன்ஷாஅல்லாஹ் நாங்களெல்லாம் அல்லாஹ்விற்;கும் அவனது ரசூலுக்கும் மட்டும் கட்டுப்பட்டு நடக்கும் கூட்டம் என உணர்த்தும் விதமாக இந்த மாநாடு அமையும் என்று கூறி முடித்தார்கள்.

 


 

        Email Us        |     FeedBack           |    Introduce To Friends    |   Advertisements   |   Tntj.net - 2005