கடந்த வெள்ளி அன்று தம்மாமில் நடைபெற்ற சிறப்பு இஸ்லாமிய கூட்டம்!

 தாயகத்திலிருந்து மாநிலத் தலைவர் பி.ஜே தொலைபேசியில் உரை!

 கலந்து கொண்டவர்களிடம் இஸ்லாமிய கேள்வி பதில் போட்டி!
 வென்றவர்களுக்கு பரிசுகள்!

 புகைப்படங்களுடன் செய்தி...
 

தம்மாம் மண்டலத்திற்குட்பட்ட தம்மாம் TNTJ கிளை 1ன் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி தம்மாம் TNTJ மர்கஸில் கடந்த 07-03-2008 வெள்ளிக்கிழமை ஜும்ஆவிற்கு பிறகு நடைபெற்றது.

மௌலவி ஜக்கரியா சிராஜி 'தியாகம்' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். மண்டல தலைவர் முனீப் TNTJ யின் செயல்பாடுகள் பற்றியும் தமிழ் முஸ்லிம்கள் அணிவகுக்க வேண்டிய சரியான இயக்கம் எது என்றும் காரண காரியங்களுடன் விளக்கினார்.


.
உணவு இடைவேளைக்குப் பின்னர் மண்டல செயலாளர் உஸ்மான் கலந்து கொண்டவர்கள் மத்தியில் மார்க்க சம்பந்தமான கேள்விகள் கேட்டு ஆர்வமுடன் பதிலளித்த சகோதரர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.

அதன்பின்னர் தொலைபேசி வழியாக மாநிலத் தலைவர் சகோதரர் P.J அவர்கள் இன்ஷா அல்லாஹ் மே 10,11 தேதிகளில் தஞ்சையில் நடைபெறவிருக்கும் தவ்ஹீத் எழுச்சி மாநாட்டின் சிறப்புகளை விளக்கியதுடன் கலந்து கொண்ட புதிய சகோதரர்களின் மார்க்கம் அரசியல் மற்றும் இயக்கம் சம்பந்தமான கேள்விகளுக்கும் பதிலளித்தார்கள்.

 

 

மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற நிகழ்ச்சிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட சகோதரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர் தம்மாம் TNJT கிளை1ன் செயலாளர் பாமணி சாதிக் நன்றி கூற துஆ வுடன் நிறைவடைந்தது. (அல்ஹம்துலில்லாஹ்)
 

        Email Us        |     FeedBack           |    Introduce To Friends    |   Advertisements   |   Tntj.net - 2005