தம்மாமில் நடைபெற்ற செயற்குழு கூட்டம்!

  தொலைபேசிய வழியாக எஸ்.எம் பாக்கர் உரை!
  புகைப்படங்களுடன் செய்தி..
 

 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தம்மாம் மண்டல செயற்குழு கூட்டம் தம்மாம் மண்டல மர்கஸில் 21-02-2008 வியாழன் இரவு 11 மணிக்கு துவங்கியது. மாநில பொதுச்செயலாளர் சகோதரர் S.M.பாக்கர் அவர்கள்
துபையிலிருந்து தொலைபேசி வழியாக உரை நிகழ்தினார்கள்.


தஞ்சையில் இன்சாஅல்லா நடைபெறவிருக்கும் தவ்ஹீத் எழுச்சி மாநாட்டின் நோக்கம் மற்றும் அதில் அமையவிருக்கும் சிற்ப்புகள் குறித்து விளக்கமளித்தார். மாநாடு பற்றிய சகோதரர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

 


தம்மாம் மண்டலத்திற்குட்பட்ட தம்மாம் 1 , தம்மாம் 2, அல்கோபர் 1, அல்கோபர் 2, ரஹிமா, சிஹாத், அவ்ஜாம், ஜுபைல் ஆகிய கிளைகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பெருவாரியாக கலந்து கொண்டனர்.

 


மநாடு சிற்ப்புடன் நடைபெறுவதற்கான ஆலோசனைகள் கலந்துரையாடப்பட்டது. மற்றும் தமிழகத்தில் நடைபெரும் ஜமாஅத்தின்


பணிகளில் தம்மாம் மண்டலம் சார்பான பங்களிப்புகள் குறித்தும் உபயோகமான கருத்துகள் கேட்டறியப்பட்டது.

 


மண்டல தலைவர் முனீப் தவ்ஹீத்வாதிகளின் பண்புகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
மண்டல செயலாளர் உஸ்மான் நன்றியுரையற்றினார்.


பின்னிரவு மூன்று மணிவரை நடைபெற்ற கூட்டத்தில் ஆர்வமுடன் பல்வேறு கிளைகளைச்சேர்ந்த உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.


துஆவுடன் கூட்டம் இனிதே நிறைவடைந்தது.

 

        Email Us        |     FeedBack           |    Introduce To Friends    |   Advertisements   |   Tntj.net - 2005