தஞ்சை வடக்கு கிளைகளில் நடைபெற்ள பெண்களுக்கான சிறப்பு பயான்கள்!

  தவ்ஹீத் ஆலிமாக்கள் சிறப்புரை.

  ஆர்வத்துடன் கலந்து கொண்ட இஸ்லாமிய பெண்கள்.
  புகைப்படங்களுடன் செய்தி.

 

 

குடந்தையில்..


06-02-08 புதன் கிழமை அன்று தஞ்சை மாவட்ட வடக்கு குடந்தை உல்லிகான் சந்தில் பெண்களுக்கான மார்க்க பயான் நடந்தது.
 

 

இதில் சகோதரி: ஷாஹின் தாஜ் (இரண்டாம் ஆண்டு மாணவி - அன் நூர் இஸ்லாமிய கல்லூரி) அவர்கள் தலைமை உரையாற்றினார்கள், மற்றும் சகோதரி: பெனாசிர் (மூன்றாம் ஆண்டு மாணவி - அன் நூர் இஸ்லாமிய கல்லூரி) அவர்கள் “மறுமை சிந்தனை” என்ற தலைப்பிலும், சகோதரி: சுமையா (ஆசிரியை - அன் நூர் இஸ்லாமிய கல்லூரி) அவர்கள், “கொள்கையில் உருதி” என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள். இதில் 35 –ற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துக்கொண்டனர்


 

 

சன்னாபுரத்தில்...

 

05-02-08 செவ்வாய் கிழமை அன்று தஞ்சை மாவட்ட வடக்கு சன்னாபுரம் கிளையில் சார்பாக திருநாகேஸ்வரத்தில் R.V.நகரில் பெண்களுக்கான மார்க்க பயான் நடந்தது.

 

 

இதில் சகோதரி: ஜரினா (மூன்றாம் ஆண்டு மாணவி – அன் நூர் இஸ்லாமிய கல்லூரி) அவர்கள் தலைமை உரையாற்றினார்கள், மற்றும் சகோதரி: சுமையா (ஆசிரியை - அன் நூர் இஸ்லாமிய கல்லூரி) அவர்கள் “அன்றைய சஹாபாக்கள் பெண்களும் இன்றைய நவீன பெண்களும்” என்ற தலைப்பிலும், சகோதரி: நஸ்ரின் நிஹாரா (மூன்றாம் ஆண்டு மாணவி - அன் நூர் இஸ்லாமிய கல்லூரி) “தொழுகையின் நன்மைகள்” என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றினார்கள். இறுதியில் சகோதரி: தஸ்னீம் (இரண்டாம் ஆண்டு மாணவி - அன் நூர் இஸ்லாமிய கல்லூரி) அவர்கள் நன்றியுரை ஆற்றினார்கள். இதில் சுமார் 40 பெண்கள் கலந்துக்கொண்டு பயன்பெற்றனர்.



 


வலங்கைமானில்...


03-02-08 ஞாயிறுக்கிழமை அன்று 5:30 மணியளவில், தஞ்சை வடக்கு வலங்கைமான் கிளையின் சார்பாக பெண்களுக்கான மார்க்க பயான் நடந்தது.



இதில் சகோதரி: மைசா (மூன்றாம் ஆண்டு மாணவி - அன் நூர் இஸ்லாமிய கல்லூரி) அவர்கள் “சகாபக்கால பெண்களின் தியாகம்” என்ற தலைப்பிலும், சகோதரி: சம்சாத் (ஆசிரியை - அன் நூர் இஸ்லாமிய கல்லூரி) அவர்கள் “இணைவைத்தல்” என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றினார்சள்.
 

 

 

 

        Email Us        |     FeedBack           |    Introduce To Friends    |   Advertisements   |   Tntj.net - 2005