தஞ்சை வடக்கு திருவாவடுதுறை கிளையில் நடைபெற்ற பெண்கள் பயான்!

  மற்றும் தெருமுனைச் பிரச்சாரம்!

  புகைப்படங்களுடன் செய்தி...


நாகை வடக்கு மாவட்டம் திருவாவடுதுறை கிளை சார்பாக 23-03-08 ஞாயிற்றுக்கிழமை அன்று ஹாஜியார் தெருவில் நஜீர் அவர்களின வீட்டில் பெண்கள் பயான் நடை பெற்றது. இதில் அன்நூர் இஸ்லாமிய கல்லூரி ஆசிரியை மற்றும் மாணவிகள், சகோதரி: அணீஸ் (இரண்டாம் ஆண்டு) அவர்கள் தலைமை உரை ஆற்றினார்கள்,

 

சகோதரி: நஸ்ரீன் நிகாரா (மூன்றாம் ஆண்டு மாணவி) அவர்கள் 'தொழுகையின் சிறப்பு' என்ற தலைப்பிலும், சகோதரி: சுமையா (ஆசிரியை) அவர்கள் 'பெண்களின் நடவடிக்கைகள் ' என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள்.

 

 

இறுதியில் சகோதரி: உம்மல் ஃபலீலா (முதலாம் ஆண்டு மாணவி) அவர்கள் நன்றி உரை ஆற்றினார்கள். இதில் 30 –க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துக்கொண்டு பயன் அடைந்தனர். கிளை நிர்வாகிகள் தலைவர் சாகுல், செயலாளர் ஆசாத், பொருளாளர் கஜ்ஜாலி ஆகியோர் சிறப்பாக ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
 

மேலும் 02-03-08 ஞாயிற்றுக்கிழமை அன்று தெரு முனை பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் சகோ: புகாரி (மாவட்ட செயலாளர்) அவர்கள், மற்றும் சகோ: அப்துல் காதிரி (அடியக்கமங்களம் TNTJ பள்ளி இமாம்) அவர்களும் சிறப்புரை ஆற்றினார்கள், இந்த பிரச்சாரத்தை பல ஆண்களும், பெண்களும் கேட்டு பயன் பெற்றனர்.

 

 

 

        Email Us        |     FeedBack           |    Introduce To Friends    |   Advertisements   |   Tntj.net - 2005