தடையை மீறி தஞ்சையில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

 3000 க்கும் மேற்பட்டோர் கைது!

 பத்திரிக்கைகளில் பரபரப்பு செய்தி!

 புகைப்படங்களுடன் செய்தி...

 

தஞ்சை மாவட்டம் வடக்கு தெற்கு சார்பாக, தஞ்சை மாவட்ட 21-03-08 வெள்ளி அன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) அலுவலகம் முன்பு ஆர்பாட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டது.

 

அனுமதி மறுக்கப்பட்டாலும் தடையை மீறி ஆர்பாட்டம் நடத்தியே தீருவோம் என்று மாவட்ட நிர்வாகம் அறிப்பு செய்தனர். கைது செய்யப்படுவோம் என்ற செய்தி மக்களிடையே காட்டுத்தீபோல் பரவியது, கைது செய்யப்படுவோம் என்ற தெரிந்தும் மக்கள் கடலாய், பெண்கள் குழந்தைகளுடன் ஆர்பாட்டத்திற்கு மட்டும் அல்ல கைதுக்கே தயாராக வந்திருந்தனர்.

 

சரியாக 4:30 –க்கு ஆர்பாட்டம் துவங்கியது, ஆர்பாட்ட கோஷங்கள் தஞ்சையை பிலந்தது. கண்டன உரையை சகோ: அபூபக்கர் -தொண்டியப்பா (மாநில பொருளாளர்)அவர்கள் மற்றும் சகோ: ஜாபர் (தஞ்சை வடக்கு மாவட்ட துணை தலைவர்) அவர்களும் நிகழ்த்திய உரை உருக்கமாகவும், ஆவேசமாகவும் அமைந்தது.

 

5:30 மணியளவில் கைது நடவடிக்கை துவங்கியது, இதில் 3000 –த்திற்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் கை குழந்தைகளுடன் கைது செய்யப்பட்டனர், இவர்களை நான்கு திருமண மண்டபங்களில் அடைத்தனர், கைது செய்து அடைத்த போதும் மார்க்க பிரச்சாரமும், பிறகு இரவு 7:30 மணி அளவில் விடுவிக்கப்பட்டனர்.

 

 

ஆர்பாட்ட செய்தி அனைத்து பத்திரிக்கையிலும் இடம் பிடித்திருந்தது.

 


 

        Email Us        |     FeedBack           |    Introduce To Friends    |   Advertisements   |   Tntj.net - 2005