மே 10, 11 தஞ்சையில் முஸ்லிம்களின் தவ்ஹீத் எழுச்சி மாநாடு



அய்யா அழைக்கிறார், அம்மா அழைக்கிறார், அண்ணன் அழைக்கிறார், தளபதி; அழைக்கிறார், தலைவர் அழைக்கிறார் என்றுதான் நாட்டில் மாநாடுகளுக்கான அழைப்புகள் விடுக்கப்படும்.

தங்களின் அரசியல் இருப்பை வெளிப்படுத்திக் கொள்ளவும் பலப்படுத்திக் கொள்ளவும் அல்லது அரசியலில் அடியெடுத்து வைக்கவும் தான் மாநாடுகள் நடைபெறுகின்றன. ஆனால் இதில் மக்களுக்கு என்ன பயன் சமுதாயத்திற்கு என்ன பயன் என்றால் புஜ்யம் தான் விடையாக உள்ளது.

மற்றொரு புறமோ ஆண்மிகத்தின் பெயரால் நடக்கும் ஏமாற்று மாநாடுகள், பெருவிழாக்கள், அற்புத திருவிழாக்கள் மக்களை அப்படியே முட்டால்களாக வைத்திருக்கும் மோசடிகள் குருஜியின் மூத்த சிஷ்யர் தரிசணத்;திற்காக காத்திருக்கும் கூட்டங்கள் ஏதோ மார்க்கத்தின் ஒரு பகுதியை மட்டும் எடுத்துக் கொண்ட ஹஜ்ரத்தின் துவாவிற்காக கூடும் கூட்டங்கள்.

ஆனால் இவைகளில் முற்றிலும் மாறுபட்ட இது வரை சமுதாயமே கண்டிராத வகையில் படைத்த இறைவனையே வணங்க வேண்டும் படைப்புகளை வணங்கக் கூடாது என்ற ஒர் இறை தாரக மந்திரம் உலகேங்கும் பரவுவதற்காக நடத்தப்படுவது தான் இந்த தவ்ஹீத் எழுச்சி மாநாடு.

ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயமும் முழுமையாக உலக வாழ்கையிலும் மறுமை வாழ்கையிலும் பல்வேறு விதங்களில் பயன்பெற வேண்டும் என்பதற்காக தான் இந்த தவ்ஹீத் எழுச்சி மாநாடு.

முஸ்லிம்கள் இன்று பல்வேறு விதங்களில் துண்பப்பட்டு துயரப்பட்டு உலக வாழ்கையில் எதிர் கொள்ளும் பிரச்சனைகளை சமாளிக்க வழி தெரியாமல், வழி தவறி தடம் மாறும் நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து கொண்டே தான் உள்ளன. சமுதாயத்தில் உள்ள பல்வேறு அமைப்புகள் தங்களை வளர்த்து கொள்வதில் தான் கவனமாக உள்ளது.

இந்த நிலை மாற இம்மையிலும் மறுமையிலும் மாபெரும் வெற்றிபெற உங்கள் வாழ்கையில் மறுமலர்ச்சி பெற குடும்பத்துடன் திரண்டு வாருங்கள் ஈருலக வெற்றியுடம் திரும்பிச் செல்லுங்கள்!
 

இம்மை வெற்றிக்கு:

 

கல்வி மற்றும் உயர் கல்வி வழிகாட்டுதல் அரங்கம்.

உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வேலைவாய்ப்புகள் பற்றி ஆலோசனை அரங்கள்

சிறு முதலீட்டளார்களுக்கு நிபுணர்கள் மூலம் சுயதொழில் செய்ய ஆலோசனை.

உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களை கொண்டு மக்கள் சட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு மற்றும் ஆலோசனைகள் சொல்லும் அரங்கம்.

இஸ்லாமிய அடிப்படையில் மணமகன் மணமகள்களை தேர்ந்தெடுத்துக் கொள்ள மணமேடை ஆரங்கம்.

மிக குறைந்த விலையில் நஷ்டங்கள் இல்லாமல் வீடு கட்டுவது பற்றிய சிறந்த பொறியாளர்கள் வழிகாட்டுதலுடன் கனவு இல்லம்.

மத்திய மாநில அரசுகளின் நலத்திட்டங்களை பெறுவது பற்றிய ஆலோசனை அரங்கம்.

மந்திரமா? தந்திரமா? என்ற போலி மந்திர வாதிகளின் வேஷங்களை தோலுரித்து காட்டுமு; மேஜிக் ஷோ.

இஸ்லாம் விஞ்ஞானம் பற்றிய புதிய தொழில் நுட்பத்துடன விளக்கும் கண்காட்சி!

முஸ்லிம் விஞ்ஞானிகளின் கண்டு பிடிப்புகள் கண்காட்சி.

சுதந்திர போரில் முஸ்லிம்களின் பங்கு கண்காட்சி.

இஸ்லாம் பற்றி முஸ்லிமல்லாத பேரறிஞர்களின் நற்சான்றுகள் கண்காட்சி

 

இராக், ஆப்கானிஸ்தான், இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் முஸ்லிம்களின் துயரங்கள் குறித்து விளக்கும் கண்காட்சி

வளைகுடா நாடு சென்று நம் மக்கள் படும் அவதியையும் அதிலிருந்து மீளும் வழியையும் விளக்கும் கண்காட்சி.

எந்த நோய்க எங்கே சிகிச்சை பெறலாம்? சிறந்த மருத்துவமனைகள், உதவிபெறும் வழிகளை விளக்கும் கண்காட்சி.

இரத்த தான முகாம்

குழந்தைகள் விளையாட்டு ஏற்பாடு.

 

 

மறுமை வெற்றிக்கு

தொழுகை, ஜனாஸாவுக்கான சடங்கு செய்முறை விளக்கம்!

ஹஜ் கிரிகைகள் செய்வது எப்படி என்பது பற்றிய கஃபாவை போன்ற வடிவமைப்பில் பிரம்மாண்டமான செட்.

பிறப்பு முதல் இறப்புவரை விளக்கும் கண்காட்சி

மார்க்க விளக்கங்கள் மற்றும் பத்வாக்கள் உடனுக்குடன் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு!

பிரபலமான மற்றும் புதிதாக இஸ்லாத்தை தழுவியவர்கள் தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் அழைப்புப் பணியின் அவசியத்தை உணர்த்தும் அரங்கம்.

தர்ஹா மத்ஹப் தவறு என்பதை விளக்கும் கண்காட்சி

தினமும் மூன்று மணிநேரம் அணைவரும் ஒரே இடத்தில் கூடி சிறப்புரை கேட்கலாம்.

இரண்டே மணிநேரத்தில் குர்ஆன் வாகிக்கக் கற்றுக் கொடுக்கும் பயிற்சி அரங்கம்.

நபிமார்கள் வரலாறு ஒளி ஒலி நிகழ்ச்சி

பெண்களுக்கு பெண் அறிஞர்களைக் கொண்டு சொற்பொழிவு அரங்கம்.

ஆண்களுக்கு ஆண்களை கொண்டு விளக்கம் கூறும் அரங்கம்.

ஹிரா குகை, தபுக்குகை பத்ரு, உஹது களங்கள், மஸ்ஜிதுன் நபவி, மஸ்துல் அக்ஸா படங்களும் விளக்கக் குறிப்புகளும்.

இஸ்லாத்தில் பிறந்து எதிரிகளாகிப் போன தஸ்லீமா, சல்மான் ருஷ்டி பொன்றவர்களின் அறியாமை விளக்கும் கண்காட்சி


மாநாட்டு திடலின் சிறப்பம்சங்கள்
 

ISO சான்றிதழ் பெற்ற உலகத்தர வல்லுனர்களால் அமைக்கப்படும் மாநாட்டு அரங்குகள், தங்குமிடங்கள்

பாதுகாப்பான குடிநீர் வசதிகள்

சுகாதாரமான கழிவரை, மற்றும் குளியலரை வசதிகள்.

பல்வேறு தரப்பட்ட சுகாதாரமான உணவகங்கள்

24 மணி நேர மருத்துவ வசதிகள்

முதல் நாளில் மாநாட்டுத் திடலிலேயே தங்கிக் கொள்ளவிரும்பும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் போதுமான வசதியுடனும் பாதுகாப்புடனும் தக்க ஏற்பாடுகள்

 

இன்னும் எத்தனையோ ஈருலக வெற்றிக்கான ஆச்சரியங்களுடன் 100 ஏக்கர் பரப்பளவில் இன்ஷா அல்லாஹ் லட்சக்கணக்கான மக்கள் பங்கு பெறும்

தவ்ஹீத் எழுச்சி மாநாடு

அணைவரும் குடும்பத்துடன் வாரீர்!
 

        Email Us        |     FeedBack           |    Introduce To Friends    |   Advertisements   |   Tntj.net - 2005