சென்னை கண்காட்சியில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் ஓவியங்கள்!

 உடனடியாக தடுத்து நிறுத்திய TNTJ மாநில நிர்வாகிள்!

 கண்காட்சி நடந்த இடத்தை சீல் வைத்த காவல் துறையினர்
 
பி.ஜே அவர்கள் இது பற்றி ஜும்ஆ வில் பேசிய உரை
 

 

சென்னை லலித் கலா அகாடமியில் நடைபெற்ற காட்காட்சியல் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்த ஓவிங்கள் இடம் பெற்றது. இதனின் பிரசுரங்கள் நேற்று (6-3-2008) கட்காட்சியில் வினியோகிக்கப்பட்டது.

 

இஸ்லாமியர்களுக்கு மத்தியல் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து தகவல் அறிந்த நமது TNTJ மாநில நிர்வாகிகள் எஸ்.எம் சையத் இக்பால், முனீர், தவ்ஃபீக் ஆகியோர்கள் சென்னை மாவட்ட நிர்வாகிளுடன் நேரடியாக கலத்திற்கு விரைந்தனர்.

பிறகு இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் புகைப்படங்களை அகற்றுமாறு நிகழ்ச்சி அமைப்பாளர்களிடம் வழியுறுத்தினர். இதற்கு நிகழச்சி அமைப்பாளர்கள் மறுக்கவே நமது TNTJ தொண்டர்கள் வரவழைக்கப்பட்டு கண்காட்சியில் முற்றுகை போராட்டம் நடத்தினர். இதை அறிந்த காவல் துறையினர் அந்த ஓவியங்களை கைபற்றியதுடன் கண்காட்சி அமைப்பாளர்களையும் கைது செய்து கண்காட்சி நடந்த இடத்தை சீல் வைத்தனர்.
 

 இது பற்றி மாநிலத் தலைவர் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் இன்று (7-3-2008) ஜும்ஆவில் பேசிய உரையை கேட்க ஆன்லைன் பி.ஜே இணையதளத்தை பார்வையிடவும் www.onlinepj.com

 

 

        Email Us        |     FeedBack           |    Introduce To Friends    |   Advertisements   |   Tntj.net - 2005