நெல்லிக்குப்பம் தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு TNTJ நிவாரண உதவி!

  எரிந்து நாசமான ஒவ்வொரு வீட்டிற்கும் தலா ரூ 2000

  மாநிலத் தலைவர் நேரில் சென்று பார்வையிட்டார்!
  விடியோ காட்சிகள்...

 

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் உள்ள அவுலியா நகர் என்ற பகுதியில் சுமார் 200 குடிசைகள் உள்ளன. இங்குள்ள அனைவரும் முஸ்லிம்கள்.

கடந்த 14.02.2008 அன்று மாலை 4.45 மணியளவில் இப்பகுதியில் தீடிரென தீ விபத்து ஏற்பட்டது. குடிசைகள் தீ பிடித்து எரியத் தொடங்கியது. இதில் 15 குடிசைகள் தீயில் எரிந்து சாம்பளானது.

 

இந்த தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் தலைவர் பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் நேரில் சென்று ஆறுதல் கூறியதுடன் எரிந்து சாம்பளான வீடுகளுக்கு தலைமை மூலம் தலா ரூ 2000 வழங்க ஏற்பாடு செய்தார்கள்.

 

மாவட்டம் மற்றும் கிளை நிர்வாகிகள் அதை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கினார்கள். மேலும் கடலூர் மாவட்ட TNTJ சார்பாக பொருள் உதவி செய்யவும் ஏற்பாடு செய்தார்கள்.
 


Download Video (Save Target As)

 

        Email Us        |     FeedBack           |    Introduce To Friends    |   Advertisements   |   Tntj.net - 2005