இன்று சென்னையில் கூடிய மாநிலச் செயற்குழு!

  மே மாநாடு குறித்து ஆலோசனை!

  புகைப்படங்களுடன் செய்தி...
 

 

 

தஞ்சையில் நடைபெறவிருக்கும் தவ்ஹீத் எழுச்சி மாநாட்டை முன்னிட்டு இன்று (8-4-2008) தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலச் செயற்குழு சென்னை இராயபுரத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் கூடியது. இதில் பி.ஜே பாக்கர் போன்ற மாநில நிர்வாகிகளும், மாவட்ட நிர்வாகிகளும், மற்றும் மாநாட்டுக் குழு பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

மாநாட்டில் இடம் பெற உள்ள அரங்கங்களை பற்றி அதனின் பொறுப்பாளர்கள் விரிவான முறையில் விளக்கினார்கள். ஒவ்வொருவரும் தாங்கள் பொறுப்பேற்றுக் கொண்ட அரங்கங்களை பற்றி விளக்கையில் அரங்கத்தில் இருப்பவர்கள் ஆச்சிரியப்பட்டு வியந்தனர். உதாரணமாக எலும்பு கூடு மனிதன் மக்களிடம் பேசுவார் மற்றும் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூறுவார் என்று மொய்தீன் ஆலிம்சா கூறும் போது அனைவரும் வியந்தனர்.

மேலும் மே மாநாட்டிற்கு சென்னை பிர்லா கோளரங்கத்திலிருந்து விண்வெளி ஆராய்ச்சி வல்லுனர்கள் வருகை தந்து வின்வெளியின் முப்பரிமாண காட்சிகளை மக்களுக்கு காட்ட இருக்கின்றார்கள் என்று அதனின் பொறுப்பாளர் மொய்தீன் ஆலிம்சா கூறியது குறிப்பிடதக்கது.

மேலும் இட ஒதுக்கீட்டு விஷயத்தில் முஸ்லிம்களுக்கு செய்யப்படும் துரோகம் தொடர்ந்தால் இலட்சக்கணக்கான மக்கள் கூட இருக்கும் மாநாட்டில் அதற்கு சரியான முடிவு எடுக்கப்படும் என்று செயற்குழுவில் அறிவிக்கப்பட்டது.

மேலும் இந்த செயற்குழு இதுவரையிலும் இல்லா வண்ணம் ஆன்லைன் பி.ஜே இணையதளத்தில் 2 மணிரேம் நேரடி ஒளிபரப்பு (ஆடியோ மட்டும்) செய்யப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.
 

மே மாநாட்டை உலகம் முழுவதும் உள்ள நேயர்கள் நேரடியாக நமது இணையதளத்தில் பார்த்து மகிழ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டது.


இறுதியில் செயற்குழுவில் கலந்து கொண்ட அனைவரும் மே மாநாட்டிற்கு திறம்பட செயல்பட வேண்டும் என்ற எண்ணத்துடனும் உத்வேகத்துடனும் கலைந்து சென்றனர்.
 


 

 

        Email Us        |     FeedBack           |    Introduce To Friends    |   Advertisements   |   Tntj.net - 2005