தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை வடக்கு மாவட்டம் சார்பாக கிளை நிர்வாகிகள் மற்றும் பேச்சாளர்களுக்கான தர்பியா 18.09.2022 அன்று நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சியின் முதல் அமர்வில் மாநிலச் செயலாளர் சகோ. தாவூத் கைஸர் அவர்கள் மின்னுவதெல்லாம் பொன்னல்ல என்ற தலைப்பிலும், மாநிலத் துணைத் தலைவர் சகோ. இ.பாரூக் அவர்கள் நிர்வாகவியல் ஓர் பார்வை என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றினார்கள்.
இரண்டாம் அமர்வில் மாநிலச் செயலாளர் சகோ. அல்அமீன் அவர்கள் நமது சமுதாயத்தின் நிலையும் நமது பொறுப்பும் என்ற தலைப்பிலும்,TNTJ பேச்சாளர் சகோ. கல்லிடை யாசர் MISc அவர்கள் அமல்களில் அலட்சியம் வேண்டாம் என்ற தலைப்பிலும், மாநிலத் துணைத் தலைவர் சகோ. இ.பாரூக் அவர்கள் எதிர்ப்பில் வளர்ந்த ஏகத்துவம் என்ற தலைப்பிலும், மாநிலச் செயலாளர் சகோ. தாவூத் கைஸர் அவர்கள் பித்அத் ஒழிப்பு மாநாடு ஏன்? எதற்கு? என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றினார்கள்.