வக்ஃப் சட்டத் திருத்த மசோதா 2024 – தலைமை சுற்றறிக்கை

இறைவனின் திருப்பெயரால்…

வக்ஃப் சட்டத் திருத்த மசோதா 2024 ஐ எதிர்த்து நமது கருத்தைப் பதிவு செய்வோம்

கண்ணியத்திற்குரிய சகோதரர்களுக்கு சமீபத்தில் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வக்ஃப் வாரியச் சட்டத் திருத்த மசோதா 2024 இந்திய இஸ்லாமியர்களின் அடிப்படை உரிமைகளைப் பறிப்பதையும் , வக்ப் சொத்துக்களை அபகரிப்பதற்கான பணிகளை எளிதாக்குவதையும் தாங்கள் அறிவீர்கள்.

எதிர்கட்சிகளின் எதிர்ப்பை அடுத்து நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற கூட்டுக் குழு பொது மக்களின் கருத்துக்களை தற்போது கேட்டு வருகிறது அந்த அடிப்படையில் தங்கள் கருத்துக்களை ஈமெயில் மற்றும் கடிதம் வழியாக அனுப்ப கீழ்கண்ட ஏற்பாடுகளை செய்துள்ளோம்.

கீழே குறிப்பிடப்பட்டுள்ள லிங்கிற்கு சென்று , அங்கே கொடுக்கப்பட்டுள்ள ஆங்கில வாசகத்தை தங்கள் கடிதத்திற்கு பயன்படுத்தி கொள்வதோடு, அந்த பக்கத்தின் மூலமாகவே எளிய முறையில் தங்கள் மொபைல் அல்லது கம்யூட்டர் வாயிலாக மெயில் அனுப்பலாம். பயன்படுத்த வேண்டிய லிங்க் பின்வருமாறு

வக்ஃப் (திருத்தம்) மசோதா, 2024 எதிராக EMAIL

ஒவ்வொருவரின் தனிப்பட்ட கருத்தை கூடுதலாக சேர்த்து சொல்வதற்கும் JPC முன் நேரில் ஆஜராகி சொல்வதற்கு விரும்புபவர்கள் அதைக்குறிப்பிட்டும் எழுதலாம்.

தங்கள் எதிர்ப்பை பதிவு செய்வதன் மூலமாக ஜனநாயக கடமையாற்றுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்

இப்படிக்கு
ஏ. முஜீபுர் ரஹ்மான்
பொதுச்செயலாளர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here