திருவாரூர் தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம்

ஏக இறைவனின் திருப்பெயரால்
‎தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம்
மாநில துணை பொதுச்செயலாளர் அப்துல் ரஹீம் தலைமையில் கட்டிமேடு தவ்ஹீத் மர்க்கஸில் 22.6.25 ஞாயிறு காலை 11 மணிக்கு துவங்கி நடைபெற்றது.
‎ மாவட்ட பேச்சாளர் அப்துர் ரஷீத் துவக்க உரையாற்றினார்.
‎ மாவட்ட செயலாளர் அப்துர்ரஹ்மான் ஆண்டறிக்கை வாசித்தார். மாவட்ட பொருளாளர் ஹாஜா மைதீன் வரவு-செலவு விபரம் தாக்கல் செய்தார். மாநில செயலாளர் அல்அமீன் எதிர்கால செயல்திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார்.
‎ பிறகு மாநில துணை பொதுச்செயலாளர் அப்துல் ரஹீம் தேர்தல் அதிகாரியாக இருந்து மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.
.முகமது அசாருதீன் மாவட்ட தலைவராகவும், ஹாஜா மைதீன் மாவட்ட செயலாளராகவும், முகமது வாசீம் மாவட்ட பொருளாளராகவும், அப்துல் ரஹ்மான் மாவட்ட துணை தலைவராகவும், யாசர் அரபாத், முகமது சித்திக், முகமது உமர் கத்தாப்,நைனா முகமது ஜவாது, மாவட்ட மருத்துவணி அப்துல் ரஹ்மான், மாவட்ட மாணவரணி ராஜா முகமது ஆகியோர் மாவட்ட துணை செயலாளர்களாக பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டனர்.
‎இப்பொதுக்குழுவில் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயர்த்தவும், உள்ஒதுக்கீடு மூலம் இசுலாமியர்கள் பெற்ற வேலை வாய்ப்பு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். கட்டி முடித்து திறக்கப்படாமல் உள்ள திருத்துறைப்பூண்டி பேருந்து நிலையம் தாமதமின்றி திறக்கப்பட வேண்டும்.
அகஸ்தியம்பள்ளி முதல் திருச்சி வரை திருத்துறைப்பூண்டி வழியாக ரயில் தினசரி இயக்கப்பட வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்ற பட்டது.
‎இறுதியாக புதிதாக தேர்வு செய்யப்பட்ட மாவட்ட தலைவர் முகமது அசாருதீன் நன்றியுரை கூறினார்.