தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
தென்சென்னை மாவட்ட பொதுக்குழு
22-06-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 9:30 மணிக்கு வேளச்சேரியில் உள்ள அம்மா மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் கிளை நிர்வாகிகள், அணிச் செயலாளர்கள் மற்றும் மாவட்ட தாயீக்கள் கலந்து கொண்டனர்
இப்பொதுக்குழுவிற்கு மாநில பொருளாளர் சகோ. காஞ்சி இப்ராஹிம் அவர்கள் தலைமை தாங்கினார்கள்.
TNTJ,மாநில பொதுச் செயலாளர் சகோ. முஜிபுர் ரஹ்மான் அவர்கள் “பணிகள் அனைத்தும் படைத்தவனுக்காகவே” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
அடுத்ததாக,
மாநில பொருளாளர் சகோ. காஞ்சி இப்ராஹிம் அவர்கள் “நிர்வாகிகளின் கவனத்திற்கு” என்ற தலைப்பின் கீழ் உரை நிகழ்த்தினார்கள்.
மாவட்ட துணை செயலாளர் சகோ. அப்துல் சமது அவர்கள் “கொள்கையோடு மரணிப்போம்”* என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
அதற்கு அடுத்தபடியாக
மாவட்ட செயலாளர் சகோ. முஹம்மது ஆசாத் அவர்கள்
மாவட்டத்தின் ஆண்டு அறிக்கையை சமர்ப்பித்தார்கள்.
அதைத்தொடர்ந்து,
மாவட்ட பொருளாளர் சகோ. நூர் முஹம்மது அவர்கள்
வரவு செலவு அறிக்கையை சமர்ப்பித்தார்கள்.
அதன் பின்னர், காவல்துறை மற்றும் உளவுத்துறை சம்பந்தமான சில முக்கியமான தகவல்களை மாவட்ட துணைத்தலைவர் சகோ. ஃபயாஸ் அவர்கள் தெரிவித்தார்கள்.
மேலும் அதைத்தொடர்ந்து, இரத்ததான முகாம் மற்றும் ஆம்புலன்ஸ் சேவைகள் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை பற்றி மாவட்ட மருத்துவ அணி செயலாளர் சகோ. அப்துல்லாஹ் மஸ்வூத் அவர்கள் பேசினார்கள்.
அதைத்தொடர்ந்து, முன்மாதிரி முஸ்லிம் இளைஞர்கள் செயல் திட்டத்தை ஒட்டி செப்டம்பர் மாத செயல்திட்டங்கள் குறித்து மாவட்ட செயலாளர் சகோ. ஆசாத் அவர்கள் பேசினார்கள்.
கடந்த ஓர் ஆண்டு கிளைகள் செய்த செயல்பாடுகளின் புள்ளிகள் அடிப்படையில் கிளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை மாவட்ட துணை செயலாளர் சகோ. முஹம்மது சர்பராஸ் அவர்கள் தொகுத்து வழங்கினார்கள்.
இறுதியாக நன்றி உரை மாவட்ட வர்த்தகர் அணி செயலாளர் சகோ. ஜுபைர் அவர்கள் பேசினார்கள்.
இறைவனின் அருளால் மாவட்ட பொதுக்குழு மிகச்சிறப்பாக நடைப்பெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்…









