அனைத்து சமுதாய மக்களுக்கும் இஸ்லாத்தை பற்றி அறிந்துக் கொள்ள அடிதளமாக அமைந்த திருக்குர்ஆன் கண்காட்சி #TNTJ #கொளத்தூர் கிளை சார்பாக மாபெரும் திருக்குர்ஆன் கண்காட்சி 22/06/25 கொளத்தூர் பகுதியில் உள்ள மகராசி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் 150 மாற்று மத சகோதரர்களும், 250 இஸ்லாமிய சகோதரர்களும் குறிப்பாக மாற்று கொள்கையில் இருக்கும் இஸ்லாமிய சகோதரர்களும் அதிகமான அளவில் கலந்து கொண்டனர்.
இதில் அனைத்து சகோதரர்களுக்கும் திருக்குர்ஆனை அடிப்படையாக வைத்து இஸ்லாத்தைப் பற்றிய ஏராளமான விஷயங்களை தாவா செய்யப்பட்டது.
குறிப்பாக
- இணைவைப்பு பெரும்பாவம்
- திருக்குர்ஆன் கூறும் கடவுள் கொள்கை
- திருக்குர்ஆன் பெண்களை அடிமைப்படுத்துகிறதா?
- திருக்குர்ஆன் இறை வேதமா?
- திருக்குர்ஆன் கூறும் விஞ்ஞான உண்மைகள்
- திருக்குர்ஆன் தீவிரவாதத்தை போதிக்கிறதா?
ஆகிய தலைப்புகளில் மக்களிடத்தில் பேசப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்…
திருக்குர்ஆன் படிக்க ஆர்வமாக கேட்ட மாற்று மத சகோதரர்களுக்கு 75 திருக்குர்ஆன் தமிழாக்கம், தீண்டமைக்கு தீர்வு திருக்குர்ஆன் மட்டுமே, கடவுள் கொள்கை, பெண்ணுரிமை ஆகிய மார்க்க புத்தகங்களை அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
இதில் அனைத்து சமுதாய மக்களும் ஆர்வத்துடன் கலந்துக்கொண்டு பயன்பெற்றனர்.
அல்ஹம்துலில்லாஹ் ….
எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இதை) ஏற்றுக் கொள்வாயாக! நீயே செவியேற்பவன்; நன்கறிந்தவன்” (என்று கூறினர்.)
திருக்குர்ஆன் 2:127







