அல்லாஹ்வின் திருப்பெயரால்…
சமுதாய பாதுகாப்பு மாநாடு!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திண்டுக்கல் மாவட்டம் சார்பாக, (29-06-2025) அன்று ஞாயிறுக்கிழமை மாலை 4:30 மணியளவில் திண்டுக்கல் பேகம்பூரில் மாபெரும் மாபெரும் சமுதாய பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் ஹக்கீம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில் துவக்க நிகழ்ச்சியாக சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது.
இளைய தலைமுறையை பெரிதும் வழி கெடுப்பது! பெற்றோர்களா? நவீன கலாச்சாரமா? என்ற தலைப்பில் நடைபெற்ற பட்டிமன்றத்தின் நடுவராக இருந்து மாநில பொருளாளர் காஞ்சி இப்ராஹிம் அவர்கள் வழி நடத்தினார்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில செயலாளர் சகோதரர் முஹம்மது ஒலி misc அவர்கள் வஹீ அல்லாதது வழிகேடே! என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநில துணைத்தலைவர் சகோதரர் தாவூத் ஹைசர் misc அவர்கள் இஸ்லாமிய குடும்பங்களின் இன்றைய நிலை! என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலத் தலைவர் சகோதரர் அப்துல் கரீம் misc அவர்கள் ஃபாசிஸ ஆட்சியும் பாதிக்கப்படும் இந்தியாவும்! என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்
இஸ்லாமிய மார்க்கத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆவலுடனும் சமுதாயத்தின் மீது கொண்ட அக்கறையிலும் இம்மாநாட்டிற்கு திண்டுக்கல் மாவட்டத்தின் பகுதியில் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான ஆண்கள் பெண்கள் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டு பயனடைந்தனர்
இறுதியாக மாவட்ட செயலாளர் ஜவஹர் நன்றியுரை கூறி மாநாட்டை நிறைவு செய்தார்
அல்ஹம்துலில்லாஹ்!















