சென்னை, ஜூன் 23: மத்திய அரசில் பல்வேறு அமைச்சகங்க ளில் உள்ள 14,582 காலிப்பணியி டங்களுக்கான தேர்வுக்கு வரும் ஜூலை 4 வரை விண்ணப்பிக் கலாம் என்று மத்திய பணியா ளர் தேர்வாணையத்தின் (எஸ். எஸ்.சி.) தென்மண்டல இயக் குநர் கே.ராகுல் தெரிவித்துள் ளார்.
இது குறித்து சென்னையில் திங்கள்கிழமை அவர் செய்தியா ளர்களிடம் கூறியதாவது: மத் திய அரசின் பல்வேறு அமைச்ச கங்களில் உதவிப் பிரிவு அதிகாரி பணியிடங்கள், மத்திய கலால் துறையில் ஆய்வாளர், வருமா னவரித் துறையில் ஆய்வாளர், தணிக்கையாளர், கணக்காளர், வரி உதவியாளர், இளநிலை புள்ளியியல் அதிகாரி, தபால் ஆய்வாளர் உள்பட மொத் தம் 14,582 காலிப்பணியிடங் கள் உள்ளன. இதற்கான ஒருங் கிணைந்த பட்டதாரி நிலைத் தேர்வுக்கு வரும் ஜூலை 4-க்குள்
https.//ssc.gov.in/ என்னும் இணையதளத்தில் விண்ணப் பிக்க வேண்டும்.
கணினி மூலம் தேர்வு: இதற்கான தேர்வுகள் வரும் ஆக. 13 முதல் ஆக.30 வரை கணினி மூலம் 2 நிலைகளில் நடை பெறவுள்ளன. தமிழகத்தில் சென்னை, வேலூர், கிருஷ்ண கிரி, சேலம், திருச்சி, மதுரை, நெல்லை மற்றும் புதுச்சேரியி லும் இத்தேர்வு நடைபெறும். இப்பணியிடங்களுக்கு நியமிக் கப்படுவோருக்கு துறை சார்ந்து ரூ.45,000 முதல் ரூ.75,000 வரை மாத ஊதியம் வழங்கப்படும்.
மேலும் தென்மண்டல அலுவலகத்தின் கீழ் உள்ள தமிழ்நாடு,ஆந்திரம், தெலங்கானா மற்றும் புதுச்சேரியை சேர்ந்த மாவட்டஆட்சியர்களுக்கு எஸ்.எஸ்.சி.நடத்தும் தேர்வு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.