உயர் கல்வியைத் தொடர விரும்பும் மாணவர்களுக்கு முதல் பட்டதாரி சான்றிதழ் அல்லது பட்டதாரி இல்லை என்ற சான்றிதழ் வழங்கப்படுகிறது.
இந்த சான்றிதழின் மூலம், ஒருவர் முதல் பட்டதாரி கட்டண சலுகை அல்லது உதவித்தொகை பெறலாம்.
முதல் பட்டதாரி உதவித்தொகை அல்லது கட்டண சலுகையால் பயனடையாத உடன்பிறப்புகள் உட்பட குடும்பத்தில் பட்டதாரிகள் இல்லாதபோது மட்டுமே முதல் பட்டதாரி சான்றிதழ் தகுதியுடையது.
தமிழக அரசின் கீழ் உள்ள தாசில்தார் முதல் பட்டதாரி சான்றிதழை வழங்குகிறார்.
படிக்காத குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு கல்வி கற்பதற்காக முதல் பட்டதாரி சான்றிதழ் வழங்கப்படுகிறது, இதனால் குழந்தைகள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் பிரகாசமான எதிர்காலத்திற்கு உத்தரவாதம் அளிக்கின்றன.
மேலும், குறைந்த நிதி நிலை காரணமாக உயர்கல்வியை தொடர முடியாத தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு சான்றிதழ் சென்றடைகிறது.
தகுதி:
இந்த முதல் பட்டதாரி சான்றிதழைப் பெறுவதற்கான தகுதி அளவுகோல்கள் பின்வருமாறு:
1. விண்ணப்பதாரர் தமிழ்நாட்டில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
2. மற்ற குடும்ப உறுப்பினர்கள் யாரும் பட்டதாரியாக இருக்கக்கூடாது.
3. உடன்பிறந்தவர்கள் இந்தச் சான்றிதழைப் பெற்றிருக்கக் கூடாது.
சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்:
1. பாஸ்போர்ட் சைஸ் போட்டோ.
2. ஆதார் அட்டை.
3. ஸ்மார்ட் ரேஷன் அட்டை.
4. 10-வது மற்றும் 12-வது மதிப்பெண் சான்றிதழ்.
5. பள்ளி மாற்றுச் சான்றிதழ்.
6. வீட்டில் வேறு யாரேனும் படித்திருந்தால் அவர்களுடைய மாற்றுச் சான்றிதழ்.
சான்றிதழைப் பெற பின்பற்ற வேண்டிய படிநிலைகள்:
1. கணினியில் TNeGA (https://www.tnesevai.tn.gov.in/)என்ற இணையதளத்தை திறந்து
கொள்ளவும். அதில் பயனாளர் உள்நுழைவு (citizen login) என்ற பகுதியை click செய்து
உள்ளே சென்றால், அங்கே தோன்றும் பக்கத்தில் login செய்யச் சொல்லிக் கேட்கும். அதற்கு முன்னதாக நீங்கள் உங்கள் விவரங்களைக் கொடுத்து ரெஜிஸ்டர் (register) செய்திருக்க வேண்டும்.
2. Register செய்வதற்கு New User என்ற பகுதியை click செய்து உள்ளே சென்று
உங்களுடைய முழு பெயர் மற்றும் தனிப்பட்ட விவரங்களைக் கொடுத்து, கடவுச்சொல்லை (password) set செய்துவிட்டு register செய்துகொள்ள வேண்டும். அதன் பின் உங்களுடைய user name மற்றும் password-ஐ குறித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
3. தொடர்ந்து, login செய்து உள்ளே சென்ற பின் தோன்றும் பக்கத்தில் Revenue department என்பதை click செய்து உள்ளே சென்றால், REV-104-First Graduate Certificate என்ற option – ஐ click செய்ய வேண்டும்.
4. அடுத்ததாக open ஆகும் புதிய பக்கத்தில், apply செய்வதற்குத் தேவையான ஆவணங்கள் குறித்த விவரங்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அவற்றைக் கவனமாகப் படித்து, அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். பின் proceed கொடுத்து உள்ளே செல்ல வேண்டும்.
5. அடுத்து CAN (The Common Account Number) number தெரிந்தால் register செய்ய
வேண்டும். ஒருவேளை தெரியவில்லை எனில், அந்தப் பகுதியின் கீழே ஆதார் குறித்த
விவரங்கள் கேட்கப்படும், அதைச் சரியாகக் கொடுத்துவிட்டு search என்ற பகுதியை க்ளிக் செய்தால் CAN number கிடைத்துவிடும். அதை click செய்து, ஆதார் கார்டில்
இணைக்கப்பட்டிருக்கும் mobile number-ஐ type செய்யவும். அதன் பின் இணைக்கப்பட்ட mobile number – க்கு ஒரு OTP வரும். அதைக் கொடுத்துவிட்டு, proceed என்ற option-ஐ click செய்ய வேண்டும்.
6. அதன் பின் திறக்கும் பக்கத்தில் சுய விவரங்கள் (personal details) அனைத்தும்
கேட்கப்படும். நீங்கள் CAN பகுதியைப் பூர்த்தி செய்திருப்பதால் உங்களுடைய விவரங்கள் தானாக நிரப்பப்பட்டு இருக்கும். அதன் கீழே உங்களுடைய தொழில், வகுப்பு, படிப்பு, பெற்றோர்களுடைய சுய விவரங்கள், பெற்றோர்களின் பெற்றோர்களுடைய சுய விவரங்கள், வேலை தொடர்பான மற்ற அனைத்து விவரங்களையும் கவனமாகப் பார்த்து நிரப்ப வேண்டும். நிரப்பப்பட்டிருபப்பது சரியாக உள்ளதா என்று check செய்து கொள்ளவும். அதன் பின் submit கொடுக்க வேண்டும்.
7. அடுத்தபடியாக, கேட்கப்பட்ட ஆவணங்களை ஒவ்வொன்றாக பதிவேற்றம் (upload) செய்ய வேண்டும். ஒவ்வொரு document-டையும் அடுத்தடுத்து upload செய்யவும். ஆவணங்களை பதிவேற்றம் செய்வதற்குத் தேவையான அளவுகளில் அவற்றை சரியாக வைத்திருந்தால், இந்தப் பகுதியில் சுலபமாகப் பதிவேற்றம் செய்ய முடியும். அனைத்தையும் பதிவேற்றம் செய்தபின் make payment என்று இருப்பதை click செய்ய வேண்டும்.
8. இப்போது, payment செய்வதற்குக் கொடுக்கப்பட்டிருக்கும் முறைகளில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதன் மூலம் ரூபாய் 60 செலுத்த வேண்டும். பின் உங்களுக்கு ஒப்புகை சீட்டு (Acknowledgement card) ஒன்று வழங்கப்படும், அதை print எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். பதிவேற்றம் செய்த பின் உங்களுடைய படிவம் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக நீங்கள் கொடுத்திருக்கும் அலைபேசி எண்ணுக்கு ஒரு குறுஞ்செய்தி வரும். விண்ணப்பம் அடுத்தடுத்த அதிகாரிகளின் கவனத்துக்குச் சென்று சரிபார்க்கப்பட்டு, 10 நாள்களுக்குள் சான்றிதழை பெறலாம்.