மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி

சிவகாசியில்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக…
மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி
முன்மாதிரி இளைஞர்களை உருவாக்கும் நோக்கில் பல செயல் திட்டங்களை வகுத்து இறை உதவியால் மக்கள் பேரியக்கம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பல பணிகளை மேற்கொண்டு வருகின்றது.
இதில், இன்று(14.07.2025) சிவகாசி முஸ்லிம் மேல் நிலைப்பள்ளி மற்றும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இணைந்து மாபெரும் மாணவர்களுக்கான சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது.
பள்ளி பருவ வயதில் பாதிப்பை விளைவிக்கும் முக்கிய காரணிகளை அறிந்து அந்த மாணவர்களுக்கு கல்வி கற்பதினால் கிடைக்கும் பலாபலன்களை எடுத்துரைப்பது காலத்தின் கட்டாயமாகும்!
இதனை மாணவர்களின் மனநிலைக்கு தக்கவாறு சிறப்பான முறையில் சகோ.ஜாவித் அஷ்ரஃப் (TNTJ மாநில மாணவரணி ஒருங்கிணைப்பாளர்) வழங்கினார்கள்.
இளைய சமூகத்தை சிந்திக்க விடாமல் அவர்களுடைய சிந்தனையை சீர்குலையச் செய்கின்ற காரணிகளான் மது, புகை போன்ற போதை வஸ்துகளினால் ஏற்படும் பாதிப்பைக் குறித்து எடுத்துரைத்து மாணவர்களை நல்வழியின் பக்கம் அழைக்கின்ற வகையில் சகோ.முகம்மது ஷஃபீக் (TNTJ மாவட்டத் தலைவர்) வகுப்பெடுத்தார்கள்.
போதையினால் உடல் கூறுகள் சிதைந்து, அதனால் ஏற்படும் நோய்கள், வாழ்க்கை பாதிப்புகள், போன்றவற்றை விளக்குகின்ற காட்சிகள் காணொலி மூலமாக ஒளிபரப்பப்பட்டு அனைத்து மாணவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
காலை 11 மணி முதல் நடைப்பெற்ற இந்நிகழ்ச்சியல் பள்ளியின் தலைமையாசிரியர் ஷேக் முகம்மது மீரான் அவர்களின் தலைமையில் பத்தாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்!